மூன்று வகையான துன்பங்கள்


இந்த பௌதிக உலகில், இன்பத்தைத் தேடுவதிலும் துன்பங்களிலிருந்து விடுதலை பெறவும் ஒவ்வொருவரும் முயன்று கொண்டுள்ளனர். நமது கட்டுண்ட நிலையானது

1. ஆத்யாத்மிக,
 2ஆதிபௌதிக, 
3.ஆதிதைவிக 
எனப்படும் மூவகைத் துன்பங்களுக்கு காரணமாகின்றது. உடலாலும் மனதாலும் வரும் துன்பங்கள் ஆத்யாத்மிக துயரங்கள் எனப்படுகின்றன. உதாரணமாக நமது உடலில் ஏற்படும் சில மாறுதல்களால் வலி அல்லது காய்ச்சலைப் பெறுகிறோம். மற்றொரு வகையான 

 ஆத்யாத்மிக

துயரம் மனதினால் உருவாக்கப்படுகிறது. உதாரணமாக, எனக்கு மிகவும் பிரியமான ஒருவரை நான் இழக்க நேரிட்டால், எனது மனம் பாதிப்படையும். அதுவும் துன்பமே. எனவே, உடலில் ஏற்படும் நோய்களும் மனதில் ஏற்படும் பாதிப்புகளும் ஆத்யாத்மிக துன்பங்களாகின்றன.

அடுத்ததாக, பிற ஜீவராசிகளால் உண்டாக்கப்படும் துயரங்கள்

 ஆதிபௌதிக

 துன்பங்களாகும். உதாரணமாக, மனிதர்கள் தினமும் ஆயிரக்கணக்கான அப்பாவி விலங்குகளை கசாப்புக் கூடங்களுக்கு அனுப்புகின்றனர். விலங்குகளால் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முடிவதில்லை, ஆயினும் அவை மாபெரும் துயரத்திற்கு உட்படுகின்றன. நாமும் இதர உயிர்வாழிகளால் ஏற்படும் துன்பங்களால் பாதிக்கப்படுகிறோம்.

இறுதியாக, தேவர்களைப் போன்ற உயர் அதிகாரிகளால் விளையும் 

 ஆதிதைவிக

துன்பங்களாகும். பஞ்சம், நிலநடுக்கம், வெள்ளம், ஆட்கொல்லி நோய்கள் போன்ற துயரங்கள் ஆதிதைவிகதுன்பங்களாகும்.

எனவே, நாம் இத்தகைய துன்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றால் எப்போதுமே துன்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம். இந்த ஜட சக்தியானது நம்மை துன்புறுத்துவதற்காகவே நிறுவப்பட்டுள்ளது; இதுவே கடவுளின் சட்டம். ஆனால் தற்காலிகமான தீர்வுகளால் இத்துன்பங்களிலிருந்து வெளியேற நாம் முயற்சிக்கின்றோம். ஒவ்வொருவரும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று முயன்று கொண்டுள்ளோம். வாழ்க்கைப் போராட்டம் முழுவதுமே துன்பத்திலிருந்து வெளியேறுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

நாம் பல்வேறு வழிமுறைகளின் மூலமாக துன்பங்களிலிருந்து விடுபட முயற்சிக்கின்றோம். நவீன கால விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், நாத்திகர்கள், ஆத்திகர்கள், பலன்நோக்கு கருமிகள் என பலதரப்பட்ட நபர்களும் பல்வேறு தீர்வுகளை வழங்கி வருகின்றனர். பலரிடம் பல்வேறு கருத்துகள் உள்ளன. இருப்பினும், கிருஷ்ண உணர்வு தத்துவத்தின்படி, உங்களது உணர்வுகளை கிருஷ்ண உணர்வாக நீங்கள் மாற்றிக் கொண்டால், அனைத்து துன்பங்களிலிருந்தும் உங்களால் வெளிவர இயலும். இது மிகவும் எளிதானதாகும்.
எல்லா துன்பங்களிலிருந்தும்
விடுதலை பெற தினமும்(108)முறை
சொல்வீர்,

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
மகிழ்ச்சியடைவீர்.

Post a Comment

Previous Post Next Post