சிதம்பரம் ரகசியம் போல திருக்கடையூர் ரகசியமும் இருக்கிறது. சிதம்பரம் தலத்தில் தனி சன்னதியில் வெட்டவெளியில் வில்வ மாலை தொங்கவிடப்பட்டு இருக்கும். ஒன்றும் இல்லாத அந்த அம்சம் தான் சிதம்பர ரகசியம் எனப்படுகிறது.
ஆனால் திருக்கடையூர் ரகசியம் என்பது ஆயுளை அதிகரிக்க செய்வதாகும். இந்த ரகசியப்பகுதி கால சம்ஹார சன்னதிக்குள் அமைந்துள்ளது.
இங்கு சுவாமிக்கு வலப்புற மதிலில் யந்திர தகடு ஒன்று உள்ளது. இதனை தான் “திருக்கடையூர் ரகசியம்‘ என்கிறார்கள். முதலில் பாபகரேஸ்வரரையும், பின் சுவாமியையும், அடுத்து யந்திர தகட்டையும் வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
Post a Comment