அனைத்து கிரக தோஷங்களுக்கும் அனுமனை வழிபடுகிறோம். அவருக்கு ராம நாமம் பிடிக்கும். ராமா, ராமா என்று தினமும் சொல்லுங்கள், அனுமத் ஜெயந்தியன்று ஸ்ரீராம ஜெயத்தை நாவினிக்க சொல்லுங்கள். அவரருள் உடன் கிட்டும்.

எந்தக்கிழமையில்_என்ன_செய்வது?

திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழனன்று வெற்றிலை மாலை, துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சாத்தலாம்.

அனுமனும்_ராமனும்

அனுமன் பிறர் நலமே தன்னலம் என நினைத்தவர். சுயநலமில்லாமல் ராமனுக்கு சேவை செய்தவர். அப்படிப்பட்டவர்களுக்கு கடவுளின் அருகில் இடம் பதிவு செய்யப்படும் என்பதை உணர்த்தவே, ராமன் அனுமனை தன்னருகில் அமரச் செய்துள்ளார்.

சங்கு_சக்கர_ஆஞ்சநேயர்

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில், சுவாமி சந்நிதி எதிரே ஆஞ்சநேயர் சங்கு சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். இது ஒரு மாறுபட்ட கோலமாகும்.

ராம_பாராயண_ஆஞ்சநேயர்

ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோயில் அருகேஉள்ள நந்தவனத்தில் ராமநாமம் பாராயணம் செய்யும் கோலத்தில் அனுமன் வீற்றிருக்கிறார். அருகே ராமர், பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறார்.

அனுமனை_வணங்குவதன்_பலன்

அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம்.

கிருஷ்ணனுக்கும்_பிரியமானவர்

அனுமன் ராமனுக்கு மட்டுமல்ல! ராமாவதாரத்தை அடுத்து வந்த கிருஷ்ணாவதாரத்தில், அர்ஜுனனின் கொடியில் இருந்தவர் அவர். அவரது முன்னிலையிலேயே, கிருஷ்ணன் கீதையைப் போதித்தார்.

கண்_கொடுக்கும்_ஆஞ்சநேயர்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தேரடியின் கீழ் கண்கொடுக்கும் ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். வெண்பாப்புலி வேலுசாமி பிள்ளை என்பவர் ஆஞ்சநேய புராணம் என்ற துதிபாடி இழந்தபார்வையை மீண்டும் பெற்றார்.

பெருமாள்_அருகில்_அனுமன்

ராமர் அருகில் மட்டுமில்லாமல், தேனி அருகிலுள்ள சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் மூலஸ்தானத்தில், பெருமாள் அருகிலும் அனுமனைத் தரிசிக்கலாம்.

கீதைக்கு_உரை_எழுதியவர்

கீதைக்கு பலர் உரை எழுதியுள்ளனர். "பைசாசம்' என்ற மொழியில், ஆஞ்சநேயர் கீதைக்கு பாஷ்யம் (விளக்கவுரை) எழுதியதாகச் சொல்வர்.

இலக்கண_பட்டதாரி

சிறந்த கல்விமானான அனுமனை, "நவ வ்யாகரண வேத்தா' என்பர். அதாவது, அவர் ஒன்பது வகையான இலக்கணத்தையும் படித்தவர். புத்தி, சக்தி இரண்டும் அவரிடம் இருந்தது.

ஒரே_சிலையில்_மூன்று_வடிவம்

உ.பி. கான்பூரிலிருந்து 8 கி.மீ. தூரத்திலுள்ள பங்கிஆஞ்சநேயர் கோயிலில், காலையில்அனுமன் குழந்தை வடிவிலும், மதியம் இளைஞனாகவும், மாலையில் வீர புருஷராகவும் காட்சி தருகிறார்.

வீரமங்கள_ஆஞ்சநேயர்

நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள பொரவச்சேரி ராமபத்ர பெருமாள் கோயிலில் வீரமங்கள ஆஞ்சநேயர், வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை வடக்கு நோக்கி மடித்து வைத்த நிலையில் தரிசனம் தருகிறார்.

துஷ்ட_நிக்ரஹ_அனுமான்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைக்கோட்டை செல்லும் வழியில் உள்ள சிறு குன்றில் துஷ்ட நிக்ரஹ அனுமான் அருள்பாலிக்கிறார். வலது கைபக்தர்களின் துன்பங்களைஅறைந்து விரட்டுவது போல வடிக்கப்பட்டுள்ளது.

ஊருக்கு_ஒரு_பெயர்

அனுமனை கர்நாடகத்தில் ஹனுமந்தையா, ஆந்திராவில் ஆஞ்சநேயலு, மகாராஷ்டிராவில் மாருதி, சில வட மாநிலங்களில் மகாவீர் என்று அழைக்கின்றனர்.

கெடாத_வடைமாலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலுள்ள வீர அழகர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் அணிவிக்கும் வடைமாலை நீண்டநாள் கெடுவதில்லை.

வாயைப்_பொத்திய_ஆஞ்சநேயர்

ராமனின் முன்பு தலையை குனிந்து, வாய் பொத்தி, மிகுந்த மரியாதையுடன் உள்ள அனுமன் சிலை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் ராமசாமி கோயிலில் உள்ளது.

ராமநாம_மகிமை

ராம நாமம் சொன்னால் பாவம் தீரும். மரணத்தின் விளிம்பிற்கு செல்பவர்கள் நலன் பெறுவார்கள். அனுமன் ஓயாமல் ராமநாமம் சொன்னதால் தான், கடலைத் தாண்ட முடிந்தது. முடியாததையும் முடித்து வைப்பது ராமநாமம்.

Post a Comment

Previous Post Next Post