முருகன் சிவ பூசை செய்து முழுமுதற்பரம்பொருளை வழிபட்டு நலம் பெற்ற தலங்கள் :
தோற்றம் அவதாரம் பிறப்பு வளர்ப்பு அம்சம் உள்ளிட்ட மாசு மலங்கள் இல்லாத எல்லாம் வல்ல தூய பரம சிவம் ஆறு முகம் கொண்ட அதோமுக மூர்த்தியாய் ஆறு நெற்றிக் கண் பொறிகளை நீரில் சேர்த்தது. அவை ஆறு குழந்தைகளாக வடக்கே இமய மலையில் உள்ள சரவணப் பொய்கையில் தாமரைப் பூவில் பிறந்தன. தாமரைப் பூவில் சரவணத்தில் அழகிய குழந்தையாய்ப் பிறந்ததால் முருகன் சரவண பவன் என்று பெயர். ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்று பெயர். ஆறு குழந்தைகள் சேர்ந்து ஆறுமுகம் கொண்ட ஒரு குழந்தை ஆனதால் கந்தன் ஆறுமுகன் என்று பெயர். பைரவர் (வலிமை யானவர்) என்ற சிவ நாமமே அவர் படைத்த நாய் வாகனக் காவல் தெய்வத்திற்கும் பெயர் ஆனது போல் சிவ நாமமான ஆறுமுகன் முருகனுக்குப் பெயர் ஆனது. குழந்தையாகப் பிறந்து வளர்ந்து வாலிபன் ஆனதால் பால முருகன் குமரன் என்று பெயர்கள். பரமனது நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வீரபத்திரர் பிறக்கும்போதே போதே பெரியவராகத் தோன்றினார். முருகன் குழந்தையாய்த் தோன்றி வளர்ந்து குமரன் ஆனான்.
🍁 *உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற* (சுந்தரர்)
☘ *நாரணன்னொடு நான்முகன் இந்திரன் வாரணன் குமரன் வணங்கும் கழல் பூரணன்* 🙏 *சரவணத்தான் கை தொழுது சாரும் அடி* (அப்பர்)
என கை கூப்புதல் பணிதல் இல்லாத , ஆண் பெண் அலி அது ஆகிய எல்லாமாக உள்ள பரி பூரண முழுமுதற் பரம்பொருளை உமையவள் அரி அயன் இந்திரன் விநாயகர் போன்று முருகனும் பூசை செய்து கை கூப்பித் தொழுது பணிந்து வழிபட்டுக் குற்றம் குறை நீங்கி வேண்டிய வரம் பெற்ற தலங்கள் கணக்கற்றவை. கும்பகோணம் அருகே சேங்கனூர் எனப்படும் சேய்ஞலூர் சேய் நாதர் கோயில், கோயம்புத்தூர் அருகே அவிநாசி பக்கம் திருமுருகன் பூண்டி முருக நாதர் கோயில், மதுரை சுந்தரேசர் கோயில், மதுரை அருகே திருப் பரங்குன்றம் பரங்கிரி நாதர் கோயில், திருச்செந்தூர் சிந்தூர நாதர் கோயில், திருவாரூர் அருகே மணக்கால் எனப்படும் பெருவேளூர் பிரியாத பெருமான் திருக்கோயில், வைதீசுவரன் கோயில் (புள்ளிருக்கு வேள் ஊர்), திருச் சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் கோயில், கீவளூர் (திருக் கீழ் வேளூர்) கேடிலி யப்பர் கோயில் மற்றும் பலப் பல கோயில்கள் முருகன் சிவ பூசை செய்து வரம் பெற்ற கோயில்களாகும்.
*திரு ஓமாம் புலியூர் பிரணவ வியாக்கிர புரீசர் கோயிலில்* சிவ பூசை செய்து வழிபட்ட பரா சக்திக்கு *ஓங்காரேசுவரன் ஓங்காரம் உரைத்த போது முருகன் முறையற்ற முறையில் மறைந்திருந்து அரை குறையாய் ஓங்காரப் பொருள் அறிந்தான்*. அந்தப் பாவம் நீங்குவதற்காக முருகன் திருப் பரங்குன்றத்தில் சரவணத் தீர்த்தம் உண்டாக்கி சிவ பூசை செய்து பரங்கிரி நாதரின் அருளால் நலம் பெற்றான். பரங்கிரி நாதர் முன்னிலையில் முருகன் தெய்வ யானைத் திருமணம் நடைபெற்றது. இதை மணவேள் பரங்குன்றம் என்று பரிபாடல் போற்றுகிறது. *பரங்கிரி நாதர் கோயிலில் முருகனுக்குத் தனியே சந்நிதி கூட இல்லை*. பரங்கிரி லிங்கக் கருவறையின் உட்புறச் சுவற்றில் பிள்ளையார் போன்று உள்ள முருகன் அடியார் கோலத்திலோ தெய்வ யானையோடு மணக் கோலத்திலோ இல்லாமல் முருகன் கீழ் ஒருபுறம் ஒரு பெண்ணும் (தெய்வ யானை என்பர்) மறு புறம் ஒரு ஆணும் (நக்கீரர் என்பர்) இருப்பதால் இது பழங்கால உருவம் அல்ல, *கோயிலோடு சம்பந்தமே இல்லாத இந்த முருகன் உருவம் பிற்காலத்தில் மனம் போனபடி அஞ்ஞானச் சிற்பியால் செதுக்கப்பட்டதே* ஆகும்.
🙏போரில் வெற்றி வேண்டி முருகன் சிவ பூசை செய்த தலமே செயந்திபுரம், வெற்றியூர், சிந்தூர் எனப்பட்ட திருச்செந்தூர். சிந்துரம் என்றால் குங்குமம் என்று பொருள். 🙏 *இருக்கு ஓதி ஆட்டிக் குங்குமக் குழம்பு* சாத்தி ... ஈசனை (அப்பர்)
என சந்தனம் விபூதி போல் ஓங்கார வடிவ சிவ லிங்கத்திற்குக் குங்குமத்தால் அபிடேகம் செய்து குங்குமக் காப்பு சார்த்தி முருகன் வழிபட்டதால் சிந்தூர் என்று பெயர் பெற்றுச் செந்தூர் என்று ஆனது. 🌺 *சிந்துரச் சேவடியானை* என்று திருவாசகம் சிந்தூர் ஈசனைப் போற்றுகிறது. தேவாரம் சிவத் தலமான செயந்திபுரத்தை வெற்றியூரைப் போற்றுகிறது. போரில் வெற்றி பெறுவதற்காகத் திருச் செந்தூரில் ஐந்து லிங்கப் பரம்பொருளைப் பிரதிட்டை செய்த முருகனுக்குப் பரமேசுவரன் பதினோரு ருத்திரர்களைப் பதினோரு ஆயுதமாகவும் பன்னிரண்டாவது ஆயுதமாக அரச இலை போல் உள்ள ஞான வேல் என்னும் வேலாயுதத்தையும் படைத்துக் கொடுத்தார் என்று கந்த புராணம் கூறுகிறது. நீண்டு வளைவுகளைக் கொண்ட வேலுக்கு சக்தி வேல் என்று பெயர். இது இந்திரனது ஆயுதம். *காஞ்சி புரத்தில் முருகன் சிவ பூசை போது* பரமேசுவரன் முருகனை தேவ சேனாதிபதியாக்கி அருளினார். 💥 *சேனாபதியாகச் செம்பொன் முடி கவித்து வான் ஆள வைத்த வரம்* போற்றி (நக்கீரர்) என முருகன் தேவ சேனாதிபதியாகப் பொறுப்பேற்றபோது இந்திரன் தன் ஆயுதமான சக்தி வேலை முருகனுக்கு வழங்கினான். முருகனது வேலோடு சிக்கல் தலத்திற்கும் பார்வதிக்கும் சம்பந்தம் இல்லை. சிக்கல் தலத்தில் அம்மனிடமிருந்து வேல் வாங்கும் விழா வடிகட்டிய கற்பனை விழாவே. ஒரு வேல் வாங்குவதற்கே வியர்த்துக் கொட்டுவது அவலமே தவிர பெருமை அல்ல. கந்த புராணத்தைப் புறக்கணித்துச் சொந்த புராணம் பாடிப் பொய் விழா நடத்தினால் வியர்வை மட்டுமல்ல ரத்தமே வடியும். தைப் பூசத்திற்கும் முருகனுக்கும் சம்பந்தம் இல்லை. பதஞ்சலி வியாக்கிர பாத முனிவர்களுக்காக நடராசர் தில்லையில் கோயில் கொண்ட திருநாள் தைப்பூசம்.
இராமேசுவரம் ராம நாதர் கோயில் போன்று கடலோரம் இருந்ததால் திருச்செந்தூருக்குத் திருச்சீர் அலைவாய் என்று பெயர். திருச்செந்தூரில் முருகன் கரங்களில் ருத்திராட்சமும் பூவும் தாங்கி சிவ பூசை செய்யும் அடியார் கோலத்திலேதான் உள்ளான். திருச்செந்தூரில் சிவபெருமான் அருள் தரும் ஆண்டவர். அவரைப் பூசை செய்து அருள் பெறும் அடியவரே முருகன். கோயிலை வணிக வளாகமாக்கிப் பணம் சேர்க்கும் நாத்திக நிர்வாகத்தால் முருகன் பூசித்த ஐந்து லிங்கங்களும் பூசை இல்லாமல் புழுதி படிந்துள்ளன. சிவாலயம் முருகன் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. திருப் பரங்குன்றத்தில் காசு கொடுத்துச் சீட்டு வாங்கினால் மூலட்டானரான பரங்கிரி லிங்கத்தை தரிசிக்க முடியும். பொது வரிசையில் சென்றால் கருவறைச் சுவற்றில் உள்ள முருகனை மட்டுமே காண முடியும். ஈசுவரன் கோயிலைக் கடத்தும் மாற்றும் இந்தக் கொடுமையை யெல்லாம் தட்டிக் கேட்பவர் யாரும் இலர். எல்லோரும் குருடு ஊமை.
மதுரை சுந்தரேசரின் அருட்பார்வையால் மீனாட்சியின் வயிற்றில் உக்கிர குமார பாண்டியனாகப் பிறந்து மதுரை ஆண்ட போதும், மதுரை அருகே ருத்திர சன்மன் என்ற ஊமை வணிக மகனாகப் பிறந்து தமிழ்ச் சங்கத்தில் சிறந்த உரையைத் தேர்ந்து எடுத்த பிறகும் முருகன் பிரதிட்டை செய்து பூசித்த லிங்கங்கள் சுந்தரேசர் கோயில் பிரகாரத்தில் உள்ளன. 🌺 *கடல் சூர் தடிந்திட்ட செட்டி* (சுந்தரர்)
🍁 *நூல் அறி புலவ* (நக்கீரர்) என உப்பூர் ருத்திர சன்மச் செட்டி வழிபட்ட உப்பூர் லிங்கம் என்பதே தவறாக உப்பு லிங்கம் என்று வழங்கப்படுகிறது.
🕉 *மூலனாம்*
🕉️ *திருமூலட்டானனே* போற்றி போற்றி (அப்பர்)
🔥 *பூரண காரணன்* (திருமந்திரம்)
என எல்லாவற்றுக்கும் மூல காரணமாக உள்ள சிவ பரம்பொருள் மட்டுமே மூலட்டானர். இதனாலேயே மூல நாதர் திருமூலர் காரணீசுவரர் என்றெல்லாம் ஈசனுக்குத் திருநாமங்கள், கை கூப்பி மலர் தூவி சிவ பூசை செய்து அருள் பெறும் முருகன் உள்ளிட்ட உயிரினங்களான எந்த ஆண் பெண் தெய்வமும் எந்தக் கோயிலிலும் மூலட்டானராக முடியாது என்பது தெரியாத அஞ்ஞானக் கூட்டங்கள் பரங்கிரி நாதர் கோயிலில் பரங்கிரி லிங்கப் பரம்பொருளை மறுத்து கருவறைச் சுவற்றில் சிற்பமாக உள்ள முருகனை மூலவர் என்று கண்ணும் கருத்தும் இல்லாமல் பொய் பேசுகின்றன. பல கோயில்களில் விநாயகரும் முருகனும் தனிச் சந்நிதிகளில் மட்டுமன்றி துவார பாலர்களாகவும் உள்ளனர். பழங்காலத்தில் முருகனும் விநாயகரும் துவார பாலர்களாக மட்டுமே இருந்தனர். தனிச் சந்நிதியும் தனிக் கோயிலும் பிற்காலத்தில் உண்டானவையே. அம்பாள் சந்நிதியும் பிற்காலத்ததே. லிங்கம் நந்தி பலி பீடம் இவையே சிவாலயம் என்று திருமந்திரம் கூறுகிறது. சிவ வடிவங்கள் மட்டுமே கருவறைச் சுவற்றில் இருந்தன. இவற்றை தேவாரமும் ஒவ்வொரு பதிகத்திலும் தெளிவுறுத்துகின்றன. நான்முகன் துர்கை சனி நவகிரக உருவங்களை அமைப்பதுவும் பிற்காலத் தற்காலப் புன்மை.
Post a Comment