வன்னி மரம் துர்க்கைக்கும், கணபதிக்கும், சனைச்சரனுக்கும் பிரியமானது வன்னி மரம்.
வன்னி மர இலைகள் புளிய மரத்தின் இலையைப் போலவும், கீழாநெல்லியைப் போலவும் இருக்கும். இது நச்சுத் தன்மையை முறிக்கும் தன்மை கொண்டது. வன்னி மரத்தின் இடையே புகுந்த வரும் காற்று சருமப் புண்களை நீக்கும் தன்மை கொண்டது. காற்றே ஆற்றல் மிக்கதாய் மாறும் என்றால், மரத்தின் ஆற்றல் அளவிடற்கரியது.
வன்னி மரத்தின் இலை, காய், பட்டை ஆகியவற்றை உலர்த்தித் தூள் செய்து தேனோடு கலந்து கொடுக்க விஷக்கடி, அலர்ஜி போன்றவை குணமாகும். வன்னி இலையைப் பச்சையாக அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை என இரண்டு வேளை உட்கொண்டால் கடும் நோய்களும் குணமாகும்.
வன்னி மர இலைகளால் விநாயகப் பெருமானை அர்ச்சித்தால் சனி பகவானின் தொல்லைகள் மட்டுமல்ல; நம்முடைய பாவச் சுமைகளும் குறையும்.
'ஏகம் கணாதிபதயே குர்யாத்' என்கிறது சாஸ்திரம். இதன் பொருள் கேட்டவுடன் வரம் அளிப்பவர் கணபதியே என்பதாகும். ஆனால் வேண்டப்படுவது நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண்டும். பிறருக்குத் தீமையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கக் கூடாது.
விநாயகத் தோற்றத்தின் தத்துவமே நற்காரியம் செய்பவருக்கு நன்மையும், தீமை செய்பவருக்கு இடையூறுகளையும் ஏற்படுத்துவதாகும். இதனால் தான் விநாயகருக்கு 'விக்னேசுவரர்' °விக்னராஜா' என்ற திருப்பெயர்கள் உண்டாயின.
கணபதியின் சிறப்புகள் தொடரும்....
Post a Comment