யோகினி ஏகாதசி என்பது ஆடி மாதம் வருகின்ற தேய்பிறை ஏகாதசி நாளாகும். இந்த நாளில் சிவபெருமானை பூஜை செய்தால் சரும நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.
யோகினி ஏகாதசி கதை
அழகாபுரியை ஆண்டவர் குபேரன். தேவர்களின் பொக்கிஷங்களை காக்கும் யக்ஷர். இவர் ஒரு சிவபக்தர். தினந்தோறும் சிவபூஜை செய்வது இவரது வழக்கம். அவரிடம் ஹேமமாலி என்ற ஒரு பணியாள் வேலை செய்து வந்தான். அவன் நாள்தோறும் சிவ பூஜைக்காக பூக்களை பறித்து வருவான். இது அவனின் பணிகளில் ஒன்று.
ஒரு நாள் வழக்கம் போல் பூக்களை பறித்துக் கொண்டு, அவற்றை சிவ பூஜைக்கு கொண்டு செல்லாமல் தனது மனைவியிடம் சென்றான் ஹேமமாலி. அவளிடம் நேரத்தினை செலவிட்டதால் தனது பணியை மறந்தான்.
பூஜையில் இருந்த குபேரனுக்கு சிவனுக்கு சமர்ப்பிக்க மலர்கள் இல்லாததால் கோபம் கொண்டான். அவர் ஒரு பணியாளரை அழைத்து காரணம் கண்டறிய சொன்னார். ஹேமமாலி தனது மனைவியுடன் இருந்ததை அறிந்த அவர் கோபத்தில் ஹேமமாலிக்கு கொடிய 18 வகையான சரும நோய்கள் உருவாக சபாமிட்டான்.
உடனே அழகாபுரியிலிருந்து ஹேமமாலி அடர்ந்த காட்டுக்கு அனுப்பப்பட்டான். சருமநோயால் அவதிப்பட்டான். உணவுக்கும், நீருக்கும் காட்டில் அலைந்தான்.
ஒரு நாள் காட்டில் மார்கண்டேய மகரிஷியை தரிசித்தான் ஹேமமாலி. தனது நோய் காரணமாக தொலைவிலிருந்தே அவரை வணங்கினான். அவனின் பரிதாபத்திற்குரிய நிலை கண்டு ரிஷியும் காரணம் வினவினார்.
ஹேமமாலி எதையும் மறைக்காமல் நடந்ததை கூறினான். அவனின் இந்த நோயிலிருந்து குணமடையும் வழியை உரைத்தார். யோகினி ஏகாதசி விரதமிருக்க சொன்னார். அதன் வழி விரதமிருந்து ஹேமமாலி சருமநோயின் பிடியிலிருந்து விடுபட்டான். மீண்டும் குபேரனிடம் சிவபூசைக்கு தேவையான உதவிகள் செய்யும் பணியாளன் ஆனான்.
இதனை கிருஷ்ணர், யோகினி ஏகாதசி விரதமிருப்பது எண்பத்து எட்டாயிரம் பிராமணர்களுக்கு போஜனம் அளித்த பலனை கொடுக்கும் என்றும் சொன்னார்.
யோகினி ஏகாதசி - 14.08.2020
விஷ்ணுக்கு உகந்த ஏகாதசிகளில் விரதம் இருந்து வழிபாடு வந்தால் வாழ்வில் வளம் பெறலாம்.
குஷ்ட ரோகத்தை நீக்கும் யோகினி ஏகாதசி
குபேரன் சிவபூஜை செய்யும்போது, அவனுக்குப் பூக்களைக் கொண்டு வரும் வேலையை ஹேமமாலி என்பவன் செய்து வந்தான்.
மனைவியிடம் மிகுந்த அன்பு கொண்ட ஹேமமாலி ஒரு நாள், மனைவியுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்ததால், குபேரனின் பூஜைக்குப் பூக்களைக் கொண்டு போகவில்லை.
பூஜையின்போது பூக்கள் இல்லாததைக் கண்ட குபேரன் கோபத்தில் குதித்தான்.
"தவறு செய்த ஹேமமாலிக்குப் பதினெட்டு விதமான
குஷ்ட ரோகங்கள் வரட்டும்" என்று சபித்தான்.
ஹேமமாலியைக் குஷ்ட ரோகம் பீடித்தது. அவன் மனைவி விசாலாட்சி உள்ளம் உடைந்தாள்.
கணவன் மனைவி இருவருமாக மேரு மலைக்குப் போய், அங்கே தவம் செய்து கொண்டிருந்த மார்க்கண்டேயரின் திருவடிகளில் வீழ்ந்தார்கள். அவர் யோகினி ஏகாதசி யை அவர்களுக்கு உபதேசித்தார்.
அதன்படியே விரதம் இருந்து மகாவிஷ்ணுவை பூஜித்த ஹேமமாலி நோய் நீங்க பெற்றான். குபேரபுரிக்கே திரும்பினான்.
ஆடி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி யோகினி ஏகாதசி எனப்படும். குஷ்ட ரோகத்தை நீக்கும் ஏகாதசி இது.
Post a Comment