1. நாகலாபுரம்.
இது சென்னை திருப்பதி போகும் வழியில் தி.தி. தேவஸ்தானத்தால் நிர்வகிக்கும் கோவில்.
மத்ஸ்யாவதாரத்திற்கு என்று பிரத்யேக கோவில்.
மூலவர் வேதநாராயணர்.
இவரை சேவித்தால் வேத கோஷ/
வேத சமரக்ஷண பலன் கிடைக்கும்.
2. நாராயணவனம்
நாகலாபுரத்தின் அருகில் உள்ள ஊர்.
இங்கு தான் ஆகாசராஜன் அரண்மனை.
பத்மாவதி ஶ்ரீனிவாசன் திருக்கல்யாண நடந்த பவித்ரமான இடமே கோவிலானது.
திருமலையில் பெருமாள் தனியாகவும்
திருச்சானூரில் தாயார் தனியாகவும் அருள் பாலிக்கின்றனர். ஆனால் நாராயணவனத்திலோ கல்யாண கோலத்தில்
கல்யாண வெங்கடேஸ்வரர் பத்மாவதி தாயாருடன் தம்பதியாக காட்சியளிக்கின்றனர்.
இங்கே சேவித்து கல்யாண பாக்கியம்
புத்திர செளபாக்யம் அடையப் பெறலாம்.
3. அலுமேலு மங்காபுரம்
எனும் திருச்சானூர்.
அனைத்து தாயார்களிலும் இங்கே கோயில் கொண்டுள்ள அலர்மேல் மங்கைத் தாயாருக்குத் தான் முழு ஸ்வதந்திரம்.
பெருமாள் போல் எல்லா வாகனத்திலும் உற்சவம்
இவருக்கு மட்டுமே.
அருகிலேயே உற்சவ ஶ்ரீனிவாசன் எழுந்தருளி இருவருக்கும் பிரதி தினமும் கல்யாண உற்சவம் நடக்கிறது.
சுந்தரராஜரும், ஶ்ரீகிருஷ்ண பலராமரும் தனி சந்நிதிகளில் உள்ளனர்.
தாயாரைச் சேவித்து அவளனுக்ரஹம் பெற்று பின் ஶ்ரீனிவாசரைத் தரிசிக்க வேண்டும்.
தாயார் சந்நிதிக்கு வெளியில் தாயார் ஆவிர்ப்பவித்த புஷ்கரணியைச் சேவிக்கலாம்.
தாயார் ஆயிரம் இதழான தாமரை புஷ்பத்தினுள் அமர்ந்து பெருமாளைக் குறித்து தபஸ் செய்கிறாள்.
ஶ்ரீனிவாசனோ குளத்துக்கு எதிரிலேயே யோக பட்டயத்தில் அமர்ந்து தாயாரைத் தியானம் செய்கிறார்.
இப்போது சூரியனானவர் தன் பொற்கிரணங்களால் தாமரை புஷ்பத்தை மலரச் செய்து தாயாரையும் பெருமாளையும் சேர்த்து வைக்கிறார்.
இப்போது நாம் திருச்சானூர் செல்லும்போது
அமர்ந்த ஶ்ரீனிவாசரையும்
சூரிய நாராயணையும்
தவறாமல் தரிசிக்க வேணும்.
தாயாரைச் சேவித்து சகல செளபாக்யங்களையும்
அடைவோம்.
தரிசனங்கள் தொடரும்.
Post a Comment