தீட்சை எத்தனை வகைப்படும்?
சமயம், விஷேடம், நிர்வாணம் என மூவகை மற்றும் சட்சு, பரிசம், மானசம், என மூவகை .
ஒருவர் சைவ சமயி ஆவதற்கு தரும் தீட்சை எது?
சமய தீட்சை .
சிவபூசை செய்வதற்கு அதிகாரம் அளிக்கும் தீட்சை எது?
விசேட தீட்சை.
பாசங்களை அறவே நீக்கிச் சிவனடியை அடைவதற்கு அளிக்கும் தீட்சை எது?
நிர்வாண தீட்சை.
குருநாதர் தன் கண் பார்வையால் அளிக்கும் தீட்சை யாது?
சட்சு தீட்சை, சட்சு என்பது கண், நயன தீட்சை
சட்சு தீட்சைக்கு காட்டும் உவமை யாது?
மீன் முட்டையை நோக்குதல்.
குருநாதர் தனது கையால் தொட்டு அளிக்கும் தீட்சை யாது?
பரிச தீட்சை, பரிசம் என்பது - தொடுதல் .
பரிச தீட்சைக்கு காட்டும் உவமை யாது?
கோழி தன் முட்டையை அடைகாத்தல் போல.
குருநாதர் தனது மனத்தால் நினைத்து செய்யும் தீட்சை எது?*
மானத தீட்சை.
மானத தீட்சைக்கு காட்டும் உவமை யாது?
ஆமை மண்ணில் புதைத்த தன் முட்டையை நினைத்தல் போல்.
திருச்சிற்றம்பலம்
இப்படிக்கு,
சாந்தாசண்முகம்
திருவல்லிக்கேணி, சென்னை.
Post a Comment