காற்றை எப்படி கையாலுவது?

நம்ம உடம்புக்குள்ள காற்று (சுவாசமாக)ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த காற்றை முறையாக கணக்கிட்டு உள்ளே இழுத்து, ஒரு குறுப்பிட்டு கால அளவு நிருத்தி, ஒரு குறிப்பிட்ட கால அளவில் வெளிவிடவேண்டும்.

அப்படி செஞ்சா என்ன ஆகும்?

காற்றை நம்மால் வசப்படுத்த முடியும். 

எத்தனை வருஷம் பண்ணனும்?

காற்று வசமாகம் வரை.

காற்று எப்படி வசமாயிடுச்சுன்னு தெரியும்?

காற்று எப்போ நாசி வழியா வெளிவிடாமல் முதுகுத்தண்டு அடியில் இருந்து மேல ஏத்தி அந்நாக்கு வழியா கொண்டு சென்று தலை உச்சியை அடைய முடியுமோ அப்பொழுது காற்றை வசப்படுத்தியாச்சு என்று அர்த்தம். 
காற்று வசமாகி உச்சியை தொடும்பொழுது நம்மை மேலே தூக்குவது போன்று உணர்வு தோன்றும். உடல் மிக லகுவாக இருக்கும். அப்பொழுது ஒளியை தரிசிக்கலாம். 

ஓஹோ அப்புறம் என்ன ஆகும்?

மூலை முழுவதும் மலர் மொட்டு விரிவது போன்று உணர்வு இருக்கும். பரவச நிலை ஏற்படும்.

அப்படியே இருந்தால் நமது உடலை விட்டு ஆன்மா பிரிந்து இருப்பது போல் தோன்றும். நமது உடல் நம் கட்டுக்குள் இருக்காது, உடலை அசைக்கவும் முடியாது. இதைதான் சமாதி நிலை என்பர்.

இதை செய்ய என்ன தேவை?

இறை அருள் தேவை. 
மனதில் வைராக்கியம் தேவை. 
பலனை எதிர்பாராமல் செய்யும பயிற்சி தோவை.

Post a Comment

Previous Post Next Post