பொங்கிவரும் வெண்ணாற்றங்கரையில் சுடுகாட்டு எல்லையில் ஆனந்த தாண்டவதுடன் எழுந்தருளி இருக்கும் என் தாய்  அங்காளபரமேஸ்வரியே மயானக் கொள்ளைக்காரியே.

அர்த்த ஜாம வேளையில் ஆங்காரமாய் ஆடி வருபவளே. துள்ளிக்குதித்து நர்த்தன தாண்டவம் ஆடி விளையாண்டு வருபவளே.

ஆறு நிறையத் தாழம்பூ . அந்தக் தாழம்பூ கொள்ளையில் தாழம்பூவைய பதமா பார்த்து வச்சு உன்னுடைய கரகத்தைத் அலங்கரித்து நீ வீதி உலா வருகையிலே.

அந்தக் கரகத்தில் பூநாகம் ஆக தாழம் பூவிற்குள் வீதி விளையாண்டு வருபவளே. ஆங்காரமாய் ஓங்காரமாய் சப்தமிட்டு ஆடி வருபவளே என் தாய் அங்காள ஈஸ்வரியே.

மேல்மலையனூர் கிடுகிடுக்க அங்கமெல்லாம் மண்டையோடு மாலை சூட்டி ஆதிசக்தியின் சொரூபமாக காட்சியளிப்பவளே.

ஆடிவரும் தேரினிலே நீ அழகாக பவனி வருபவளே. நீ வீதி வலம் வருகையில் உன் அழகைக் கண்டு இந்த அகிலமே பரவசம் அடைகிறது அம்மா.

உன் திருவிழாவை காண மேல்மலையனூர் எல்லையிலே உன் மக்களெல்லாம் நாங்க கோடிக்கணக்கில் ஒன்றாகக்கூடி நாங்கள் அழைக்கும் அழைப்பை ஏற்று சிறுபிள்ளை போல வீதியில் இறங்கி ஆடி வருபவளே.

திரிசூலம் கையெடுத்து கபாலம் தானெடுத்து .. உன் குங்கும பொட்டு ஜொலிக்க .. உன் வளையல் ஓசையிட ...

கால்முத்து சிலம்பொலிக்க ...புன்னகை பூத்த முகத்தோடு  அங்காளபரமேஸ்வரி வாருமம்மா இந்த நேரம்...

அம்மா முச்சந்தியில் முனியப்பன் காவலம்மா..வீதியில் வீரபத்தின் காவலம்மா..

மாடத்தில் மதுரைவீரன் காவலம்மா...அம்மா பாவாடைராயனுடன் புடைசூழ வருபவளே

ராஜராஜேஸ்வரியாக.. ஆதிபராசக்தியாக..
சமயபுரத்தம்மையாக..

அகிலாண்ட கோடியளே
தாயே உன் பொற்பாதம் வணங்கி சரண் அடைகிறோம். 

Post a Comment

Previous Post Next Post