பகவான் ரமணரின் அருளமுதம் 

ஞானியின் சந்நிதி  
மகிமை 

*ஒருநாள் பக்தர் ஒருவர் மிகுந்த மனவேதனையுடன்  பகவானிடம் ஒரு சந்தேகம் கேட்டார் 

பகவான்....

நீங்க நினைச்சா பக்தர்களுடைய தலையெழுத்தை மாற்றமுடியுமா...??? "

பகவான்  சிரித்தார் 

ஞானிக்கு ஏது சங்கல்பம்...???

ஒரு ஜீவன் முக்தனுக்கு சங்கல்பம் இருக்கவே முடியாது 

அது சாத்தியமில்லை" என்றார் 

அப்போ எங்க கதிதான் என்ன..???

எங்க கஷ்டங்களைப் போக்க உங்க கிட்டடதானே வேண்டுகிறோம் 

அதற்கு பலனில்லையா  என்றார்  ஒரு பக்தர் 

கருணை தோய்ந்த குரலில்

"ஒரு ஞானியின் சந்நிதியில் அமர்ந்தால் 

ஒருவரது பாவச்சுமை கணிசமாக குறையும் 

ஞானிக்கு சங்கல்பம் இல்லை 

இருந்தாலும் அவனது சந்நிதி ரொம்ப சக்தி வாய்ந்தது

ஞானி பேசாமல் சும்மா இருப்பான் 

அவனது சந்நிதி, தலையெழுத்தை மாற்றும், காப்பாற்றும் 

பக்குவமானவனுக்கு ஆன்மானுபவம் தரும் 

எல்லாம்  தானா நடக்கும் 

அவனுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது " 

என்று பேசினார் பகவான்  

ஒரு ஞானி பக்தர்களைக்  காப்பாத்துவான் 

ஆனால் சங்கல்பத்தாலே இல்லை 

அவனது சந்நிதி விசேஷத்தாலே என்றார்  பகவான் ஸ்ரீரமணமகரிஷி 

Post a Comment

Previous Post Next Post