மந்திர சக்தி சித்தியாக சித்தர்கள் அருளிய சூட்சம ரகசிய முறைகள்

  குளிர்ந்த நீரால் குளித்துவிட்டு குங்குமத்துடன் நெற்றியில் திருநீறால் பட்டையிட்டு கழுத்தில் மணிமாலை தரித்து ஒரு ஆசனத்தில் அமர்ந்து இரண்டு கண்களையும் இறுக்கமாக மூடிக்கொண்டு செபமாலையை கையில் பிடித்தபடி 

     ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை ஜெபித்து கொண்டு கையில் இருக்கின்ற மணிமாலையை உருட்டியபடி மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சொல்லி வருவதினால் மட்டுமே மந்திரம் சித்தியாகுமா என்றால் ஒருநாளும் ஜெபிக்கின்ற மந்திரம் சித்தி ஆகாது

  மந்திரங்களை உபதேசம் செய்து இதை செபித்தால் காரிய சித்தி உண்டாகும் என்று சித்தர்கள் கூறியது பொய்யா என்கின்ற கேள்விகள் மனதிலே எழலாம் 

அவர்கள் கூறியது பொய்யல்ல முற்றிலும் மறுக்க முடியாத உண்மையே 

ஜெபிக்க வேண்டிய முறைகளில் நாம் தவறுகள் செய்கின்றோம் அதனால் ஒரே மந்திரத்தை ஒரு லட்சம் முறை செபித்தாலும் கூட ஒரு முறை செபித்ததாக நாம் இருக்கின்ற இந்த பிரபஞ்சம் இதை கணக்கில் வைத்து கொள்வதில்லை

காரணம்

மந்திரத்தை ஜெபிக்கின்ற பொழுது 
மூச்சை கவனிக்காமல் மந்திரத்தை ஜெபித்தால் அந்த மந்திரம் சித்தி அடைவதில்லை

எவ்வாறெனில்

  உதாரணமாக ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சித்தியாக அதாவது வெற்றி அடைய செய்ய வேண்டுமாயின்

  மூச்சிலே கவனத்தை வைத்துகொண்டு மூச்சு உள்ளே போகின்ற பொழுது
ஓம் என்ற மந்திரத்தை மனதால் சொல்லவேண்டும்

உள்ளே சென்ற மூச்சை வெளியே விடாமல் உள்ளேயே நிறுத்தி இப்பொழுதும் ஓம் என்று ஒரு முறை மனதால் சொல்ல வேண்டும்

  இதைப்போல மூச்சு வெளியே செல்கின்ற பொழுதும் மூச்சை கவனித்து கொண்டே ஓம் என்று மனதால் ஒரு முறை சொல்ல வேண்டும்

     இப்படி செபித்து வந்தால் ஜெபிக்கின்ற மந்திரத்தை நாம் ஒருமுறை சொன்னதாக அர்த்தமாகிறது

  இதுவே மந்திரங்கள் சித்தியாக மந்திரத்தால் வெற்றி அடைய 
மந்திர ஜெயம் உண்டாக 
மந்திர ஜெபம் செய்கின்ற முறைகளாகும் 

மணி மாலைகளை கையில் உருட்டாமல் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல்

மூச்சிலே கவனத்தை வைத்துக்கொண்டு மந்திரம் ஜெபித்து வந்தால் மட்டுமே மந்திரம் சித்தியாகும் 

மூச்சைக் கவனித்தால் மனமும் அடங்கும் 

மனதால் மூச்சை கவனித்தால் சுவாசம் சீராக நடைபெறும் இதனால் வாசியும் வசப்படும் 

மந்திரமும் சித்தியாகும் 
ஞானமும் உண்டாகும்.

Post a Comment

Previous Post Next Post