ஸ்ரீராமன், தன் அவதார நோக்கத்தை முடித்துக் கொண்டவுடன், அயோத்யாவில், சரயு நதியோடு ஒன்றரக் கலந்து விட்டான் என்று சொல்லுகிறது இராமாயண இதிகாசம். ஆனால், ஸ்ரீராமனால் வதம் செய்யப் பட்ட இராவணன் உடல் இன்னும் இலங்கையில் பத்திரமாக இருப்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்! அது தான் அதிசயம்; ஆனால் உண்மை!

        இராவணனை, ஸ்ரீராமன் வதம் செய்தவுடன், இராவணது உடலை அவன் தம்பி விபீஷணனிடம் கொடுத்து, முறைப்படி இறுதிக் காரியங்களைச் செய்யச் சொன்னான். ஆனால் விபீஷணனது முடி சூட்டு விழா, லங்காபுரியில், ஸ்ரீராமன் அங்கு இருக்கும்போதே நடைபெற வேண்டி இருந்ததால், இராவணன் உடலை, விபீஷணன், 18 அடி நீளமும், 5 அடி அகலமும் உள்ள ஒரு சிறப்புப் பேழையில் வைத்து, லங்காபுரியின் “நாககுலப்” படைப் பிரிவிடம் கொடுத்துப் பார்த்துக் கொள்ளச் செய்து விட்டுப் போயிருந்தான்.

        நாககுல வீரர்கள், இராவணன் சாகவில்லை என்றும், மயக்கம் அடைந்துள்ள அவன் எப்போது வேண்டுமானாலும் எழுந்திருக்கலாம் என்றும் எண்ணி, உடல் இருந்த பேழையை, “ரக்லா” என்னும் காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று விட்டனர். சில காலம் இராவணன் உயிர் பிழைப்பான் என எண்ணி, உடல் கெடாமல் இருக்க, மூலிகைகளால் ஆனத் தைலகாப்பை உடல் முழுதும் சாற்றி, ரக்லாவின் மலை மீது சுமார் 8000 அடி உயரத்தில் உள்ள குகை ஒன்றில், பேழையை வைத்துப்  பாதுகாத்து வந்தனர்.

        ஸ்ரீலங்காவின் சுற்றுலா துறையும், அகில உலக இராமாயண ஆராய்ச்சி மையமும் சேர்ந்து ரக்லாவில் நடத்திய ஆய்வில், இந்த குகையும், அதனுள் இருக்கும் பேழையும் கண்டுபிடிக்கப் பட்டது. பேழையினுள், அரச ஆடைகளையும், ஆபரணங்களையும் தரித்த , பதப்படுத்தப்பட்ட, உயரமான சடலமும் கண்டு பிடிக்கப் பட்டு விட்டது.

        அகில உலக இராமாயண ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வில் ஸ்ரீராமன், இராவணனை 15-11-7292 கி மு அன்று வதம் செய்ததாகக் கண்டு பிடித்துள்ளனர். அதாவது, இன்றைக்கு சுமார் 9300 ஆண்டுகளுக்கு முன் அது நிகழ்ந்துள்ளது. அதோடு, நாககுலத்தினர் உடலைப் பதப்படுத்த பயன்படுத்தியுள்ள தைலம், 10000 ஆண்டுகள் ஆகியும், உடலுக்கு சேதம் ஏதும் விளைக்விக்காமல் வைத்திருப்பதாக சொல்லுகிறார்கள்.

மேலும், அந்த குகையில், பேழையைச் சுற்றிலும் பாம்புகள் இருந்தனவாம். நாககுலத்தினர் உடலைக் காத்துள்ளனர் என்று புராணம் சொல்லுவதால், நாகப் பாம்புகளைப் பாதுகாப்புக்காக குகையில் வைத்து இருந்திருக்கலாம் என்றும் கூறப் படுகிறது. இராவணனின் கபாலத்துடன் கூடிய பதப்படுத்த உடல், ஆபரணங்களுடன் பேழையில் இருப்பதை போட்டோ எடுத்துள்ளனர்.

        இப்போது, ஸ்ரீலங்கா அரசு இராமாயனம் சம்பந்தப்பட்ட 50 இடங்களைத் தேர்ந்தெடுத்து, சுற்றுலாத் தலங்களாக மாற்ற ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறதாம். இவற்றில் ரக்லா வும் ஒன்று.
        இலங்கை போனால், ரக்லாவுக்குப் போய், இராவணனது பிரம்மாண்ட உருவத்தைப் பார்த்து வாருங்கள்!

            ஜெய் ஸ்ரீ ராம். 

Post a Comment

Previous Post Next Post