146 ஆண்டுகளுக்கு பிறகு 
நார்த்தாமலை பாறையில் 
30 அடி ஆழ சுனை நீருக்குள் இருந்து வெளிப்பட்ட அதிசய ஜுரஹரேஸ்வரர் லிங்கம்!

சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற சித்தன்ன வாசல் கோயில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அருகே, நார்த்தாமலை உட்பட பல மலைகள் உள்ளன.

பல கோயில்கள் இருக்கும் மலை தான் “நார்த்தாமலை”. 

இந்த நார்த்தாமலையில் சுனைலிங்கம் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. 

இந்த பகுதி, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

இங்கிருக்கும் வரலாற்றுச் சின்னங்கள், கி.பி., 7 - 9ம் நுாற்றாண்டு பழமை வாய்ந்தது.

இங்கிருக்கும் மேல
மலையில் மிகப்பழமையான விஜயாலீஸ்வரர் கோயில் மற்றும் அதனை சார்ந்த குடைவரை கோயில்களும் இருக்கின்றன. 

இந்த கோயிலுக்கு போகும் வழியில் தலையருவி சிங்கம் என்கிற பெயரில் ஒரு நீர் 
சுனை இருந்துள்ளது. 

இது கிட்டத்தட்ட, 30 அடி ஆழம் உடையது.

அதற்கு அருகில் பழமையான கல்வெட்டு ஒன்றை இப்பகுதியை சார்ந்த சில சிவபக்தர்கள் கண்டுபிடித்தனர். 

நூற்றாண்டு பழமையான அந்த கல்வெட்டில் 1872 ஆம் ஆண்டு புதுக்கோட்டை பகுதியை ஆட்சி புரிந்த தொண்டைமான் அரசி அந்த 30 அடி ஆழமான சுனையை தூர்வாரி அங்கிருக்கும் ஜீரஹரேஸ்வரர் என்னும் சிவலிங்கத்தை வழிபட்டதாக தகவல் இடம்பெற்றுள்ளது. 

1857ல் ராஜா ராமச்சந்திர தொண்டைமான் சுனையின் நீரை இறைக்கச்செய்து, இந்த லிங்கத்திற்கு வழிபாடு நடத்தியதாக, அங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. 

அதன்பின் இந்தச் சுனை, எப்போதும் நீர் நிரம்பியே காணப்பட்டுள்ளது. 

இதை அறிந்ததும் அந்த சுனையை தூர்வாரி,
சிவலிங்க வழிபாடு செய்ய இப்பகுதியை சார்ந்த பக்தர்கள் முடிவெடுத்தனர். 

50 ஆண்டுகளுக்கு முன்,
1950 ஆம் ஆண்டுகள் 
வாக்கில் வறட்சியின் காரணமாக விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பொருட்டு, இந்தச்சுனை நீரை இறைக்க ஆரம்பித்து உள்ளனர். 

ஆனால், அதைப் பாதியிலேயே தொல்லியல் துறை தடுத்து நிறுத்தி விட்டது. 

அதன்பின், தொல்லியல் துறை அனுமதியை பெற்று, 
கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முதல் 2019
ஜனவரி 1ம் தேதி வரை தொடர்ந்து, நீர் இறைக்கும் மோட்டார்கள் உதவியுடன், சுனை நீரை இறைக்கும் பணியில், ஆன்மிக அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுனர்.

சுனையில் 7 அடி உயரத்திற்கு சேறு இருந்ததாகவும், மோட்டார் மூலம் சேற்றை வெளியேற்ற இயலாமல் போனதால் இந்த கிராம மக்கள், சிவனடியார்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து சேற்றை முழுவதுமாக தூறு எடுத்து
சுனைக்குள் இருந்த ஜுரஹரேஸ்வரர் லிங்கத்தை வெளிப்படுத்தியதோடு, அச்சுனையை நன்கு சுத்தம் செய்து கடந்த 04.01.2019 அன்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

இச்செய்தியை அறிந்ததும் புதுக்கோட்டை பகுதியை சார்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சுனைக்குள் இருந்த லிங்கத்தை வழிபட்டு வருகின்றனர். 

மீண்டும் மழைநீர் சுனையில் நிரம்பி லிங்கம் மறைவத்ற்குள் இந்த லிங்கத்தை தரிசிக்க ஏராளனமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

புதுக்கோட்டை அருகே, 
30 அடி ஆழ சுனை தண்ணீரில் புதைந்திருந்த லிங்கத்தை, தண்ணீரை இறைத்து 
பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். 

வரும் நாட்களில் மழை பெய்தால், மீண்டும் இந்த, 30 அடி சுனையில் நீர் நிரம்பிவிடும். 

பின், இந்த சுனை லிங்கத்தை வழிபாடு செய்ய, எத்தனை நாட்கள் ஆகும் என்பது தெரியவில்லை.

Post a Comment

Previous Post Next Post