நிலை மறக்கும் மனிதர்கள்

ஒரு நாள் ஒரு விவசாயி தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார். 

அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைக்கடிகாரம். அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார். அவருக்கு அந்த கைக்கடிகாரம் கிடைக்கவில்லை.

நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்து, "என் கைகடிகாரம் தொலைந்துவிட்டது. அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன்" என்றார்.

சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர். 

சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து, "எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டனர்.

ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து, "எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் தேடி தருகிறேன்" என்றான். 

விவசாயியும், "சரி! நீ போய் தேடிப்பார்" என்றார்.

மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான்.

அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன், "எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது?" என்று கேட்டார்.

"நான் உள்ளே சென்று தரையில் 'அமைதியாக' உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன். எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று. பிறகு சுலபமாக கண்டுபிடித்து விட்டேன் என்று கூறினான். 

நிலை என்பது அஸ்திவாரம் 
நமது அஸ்திவாரம் எனும் மனம்
சாந்தாமான நிலையில் என்றும் இருக்குமானால் உன்னை நீ அறியலாம்...

தெளிவான மனநிலையை சாந்தமும், அமைதியும் தான் இறுதிவரை தரும்.

கோபம் 

நம் கண்களை குருடாக்கும்... 
நம் காதுகளை செவிடாக்கும்...
நம் உள்ளத்தை ஊனமாக்கும்...
நம் உடலை விலங்காக்கும்...
நம் மூச்சை தன் நிலையை விட்டு விலகவைக்கும்... 
நம் கை, கால்களை அதன் கட்டுப்பாட்டை இழக்கவைக்கும்... 

ஆனால் ,

சாந்தம்... 

எவ்வித சூழலுக்கும் 
அருமருந்தாக அமையும்....

அமைதியான மன நிலையில் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்.

உங்களின் மனதை எந்த நிலையிலும் சாந்தமாக வைத்துக்கொண்டால் உங்கள் வாழ்க்கை அற்புதமான வரமாக அமையும். உங்களை மட்டுமல்ல உங்களை சார்ந்தவர்களையும் சேர்த்து...

இதை புரிந்துகொண்டால் வெற்றி நிச்சயம்!

Post a Comment

Previous Post Next Post