அகத்தியர் உருவாக்கிய 166 அகத்தீஸ்வரர் சிவாலயங்கள்!!!
இந்த அகத்தீஸ்வரர் ஆலயங்களில் பெரும்பாலான ஆலய முகவரிகளை நமக்கு கொடுத்து உதவிய மணி ஐயா அவர்களுக்கு கோடான கோடி சிவ நன்றிகள்!!!
14.9.2020 திங்கள்கிழமை மதியம் 1.36 முதல் 15.9.2020 செவ்வாய்க்கிழமை மதியம் 1.01 வரை அகத்தியரின் ஜென்ம நட்சத்திரமான ஆயில்யம் அன்று முழுவதும் இருக்கிறது.
சித்தர் பெருமக்களின் அகத்தியரின் தரிசனத்தையும் ,கடவுள்களில் சிவபெருமான் மற்றும் முருகக்கடவுள் தரிசனத்தையும் பெறுவது மிகவும் கடினம்.
பல பிறவிகள் போராடி ஒவ்வொரு பிறவியிலும் பிறந்தது முதல் மரண நாள் வரை ஒரே சிந்தனையோடு ஆன்மிக முயற்சிகளில் ஈடுபட்டால் மட்டுமே இந்த லட்சியங்கள் நிறைவேறும்.
கலியுகத்தில் வாழ்ந்து வரும் நாம் மூன்றுவிதமான கடன்களை செய்யாமல் விட்டு விடுகிறோம். அவை தேவ கடன் ரிஷி கடன் பிதுர்க்கடன் ஆகும்.
தேவ கடன் தீர அமாவாசை தோறும் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.
ரிஷி கடன் என்பது நம்முடைய ஊரில் உள்ள பழமையான ஆலயத்தில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் கலந்து கொள்ள வேண்டும்.நம்முடைய இஷ்ட தெய்வம் யாரோ அந்த தெய்வத்திற்கு முறைப்படி வாழ்நாள் முழுவதும் பூஜை யாகம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
பித்ருகடன் என்ற பிதுர்க்கடன் என்றால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தல் செயற்கையான விபத்தில் இறந்தவர்களுக்கு திலா ஹோமம் என்ற தில தர்ப்பணம் செய்தல் போன்றவை ஆகும்.
இந்த மூன்று கடன்களையும் தீர்ப்பதற்கு நம்முடைய முன்னோர்களாகிய சித்தர்களில் ஒருவரான இடியாப்ப சித்தர் நமக்கு ஒரு சுலபமான வழியை போதித்துள்ளார்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு வருடத்தில் வரும் 96 ஷண்ணவதி நாட்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த நாட்கள் ஒரு வருடத்தில் எப்போதெல்லாம் வரும் என்ற பட்டியலை இங்கே கொடுத்திருக்கிறோம்.
12 தமிழ் மாத பிறப்பு நாட்கள்
12 அமாவாசை நாட்கள்
12 வியாதிபாத நாட்கள்
12 வைதிருதி நாட்கள்
புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய பட்ச நாட்கள் 16
யுகாதி நாட்கள் 4
மார்கழி மாத அட்டகா & அன்வட்டகா நாட்கள் 3
தை மாத அட்டகா & அன்வட்டகா நாட்கள் 3
மாசி மாத அட்டகா & அன்வட்டகா நாட்கள் 3
பங்குனி மாத அட்டகா & அன்வட்டகா நாட்கள் 3
($ பஞ்சாங்கத்தில் அட்டகா என்று குறிப்பிடப்பட்டிருக்கும்)
ஆக மொத்தம் 96 நாட்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்;
இந்த நாட்கள் மிகவும் அதிக சக்தி வாய்ந்த நாட்கள் ஆகும்;தர்ப்பண சக்தி வாய்ந்த நாட்கள் ஆகும்;
இதுவரை எத்தனை பிறவி எடுத்துள்ளோ மோ அத்தனை பிறவி கர்மாக் கள்ளும் தீர்ந்து நம்முடைய முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசீர்வாதமும், அகத்திய மகரிஷியின் நேரடி தரிசன மும் ஆசீர்வாதமும் இப்பிறவியிலேயே வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த 96 ஷண்ணவதி நாட்களில் உங்கள் ஊருக்கு அருகிலுள்ள அகத்தீஸ்வரர் திருக்கோயி லில் தொடர்ந்து பித்ரு தர்ப்பணம் செய்து வர வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாட்களில் இந்த 96 ஷண்ணவதி நாட்கள் வரும்.
அகத்தியரின் பிறந்த நட்சத்திரமான ஆயில்யம் அன்று கீழ்காணும் பாடலை வீட்டிலோ அல்லது அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் அல்லது அகத்தியர் போட்டோ முன்பாக எட்டுமுறை ஜெபிப்பது நன்று.
ஓம் ஸ்ரீஅகஸ்தியர் திருநக்ஷத்திரப் பொற்பாதத்திரட்டு
1.வண்டமர் பூஞ்சோலைக் கற்பகமே!
வந்தெனக்கருள் அஸ்வினி பொற்பாதமே! போற்றி!
2.கண்டமர் கருணைத் திருஒளியே!
காத்தெனைக் கை தூக்கு பரணி பொற்பாதமே! போற்றி!
3.எங்கும் ஒளிரும் தீபச் சுடர் ஒளியே!
ஏங்கும் எனக்கருள்வாய் கிருத்திகை பொற்பாதமே! போற்றி!
4.தாயாய் வந்த அருள் ஒளியே !
தயை பூண்டருள்வாய் ரோகிணி பொற்பாதமே! போற்றி!
5.வேதம் ஆனாய் பேரொளியே
வெற்றி அருள்வாய் மிருகசீரிஷ பொற்பாதமே! போற்றி!
6.நாதம் ஈந்த நாரிமணியே தினம்
நலம் பல தருவாய் திருவாதிரை பொற்பாதமே! போற்றி!
7.பாதம் தந்து காத்திடுவாய்
பரிந்தருளும் புனர்பூச பொற்பாதமே! போற்றி!
8.வளம் தந்து பெருக்கிடுவாய் அன்புடன்
வணங்கிட என் பூச பொற்பாதமே! போற்றி!
9.உள்ளம் கனிய உன்புகழ் பாடும் கள்ளமற்ற
உந்தன் பிள்ளைக்கருளும் ஆயில்ய பொற்பாதமே! போற்றி!
10.கவலை போக்கி ஆதரிப்பாய் அன்னையே
கசிந்துருகும் உன் பிள்ளைக்கருள் மகப் பொற்பாதமே! போற்றி!
11.உள்ளம் மேவும் உத்தமியே உனைநினைந்து
உருகி அழுமெனைத் தேத்து உத்தம பூரம் பொற்பாதமே! போற்றி!
12.தீரா நோயைத் தீர்த்தருளும் அமுத
தீச்சுடரே தினமருள் உத்திர பொற்பாதமே! போற்றி!
13.ஆரா அமுதாய் ஆனவளே அடியேனுக்கு
ஆபத்தில் உதவிடு ஹஸ்த பொற்பாதமே! போற்றி!
14.கருவில் மீண்டும் வாராமல் கருணையோடு
காத்தருளும் கர்த்தா சித்திரை பொற்பாதமே! போற்றி!
15.கொஞ்சும் புன்னகை பூத்தவளே என்றும்
கோலாகலமாய் வாழ்ந்திட அருள் சுவாதி பொற்பாதமே! போற்றி!
16.எண்ணும் மனத்தை நீ மேவி என்னுள்
என்றும் கோயில் கொண்ட விசாக பொற்பாதமே! போற்றி!
17.பங்கம் இல்லா நிறைவாழ்வு எனக்கு
பரிவுடன் தந்து காக்கும் அனுஷம் பொற்பாதமே!போற்றி!
18.உன்னை வணங்கும் என் கைகள் என்றும்
உதவிடும் உனதருள் பெறவே கேட்டை பொற்பாதமே! போற்றி!
19.உன் புகழ் பேசும் என் நாவே தினமும்
உன் கருணை பெறவே மூலம் பொற்பாதமே!போற்றி!
20.உன்னை நினைக்கும் என் மணமே நலமுடன்
உகந்தருள் தரும் உன் பூராட பொற்பாதமே! போற்றி!
21.நின்னை நோக்கி என் கால்கள் என்றும்
நின்றே தவம் புரியும் உத்திராட பொற்பாதமே! போற்றி!
22.நித்தம் நித்தம் நினைவில் நின்று நலம் தரும்
நீலத்திருமால் அருள் பெற்ற திருவோண பொற்பாதமே! போற்றி!
23.மணமகள் மகிழச் செய்யும் மங்கையே
மன்றாடும் நின் பிள்ளை மலரச் செய்ய அவிட்ட பொற்பாதமே! போற்றி!
24.தீரா நோயைத் தீர்த்தருளும் திவ்விய
தெய்வமே சதய பொற்பாதமே! போற்றி!
25.சோதி அருள் ஈந்திடும் சுந்தர
ஆதி தெய்வமே பூரட்டாதி பொற்பாதமே! போற்றி!
26.வேதியர்க்கெல்லாம் வித்தாகிடும்
வேத தெய்வமே உத்திரட்டாதி பொற்பாதமே! போற்றி!
27.தந்தையாய் வந்து தனிப் பெருங் கருணை காட்டும்
எந்தை அருணாசலத்து வாழ் ரேவதி பொற்பாதமே! போற்றி!
பின்வரும் சிவாலயம் ஒவ்வொன்றையும் அகத்தியர் உருவாக்கி 12 தேவ வருடங்கள் பூஜை செய்திருக்கிறார்.
ஒவ்வொரு அகத்தீஸ்வரர் ஆலயத்திலும் 12 தேவ வருடங்கள் பூஜை செய்திருக்கிறார்.
ஒவ்வொரு அகத்தீஸ்வரர் ஆலயத்திற்கும் மிகவும் பிரம்மாண்டமான புராண வரலாறு உண்டு.
அகத்தியரின் கருணை இருந்தால் இந்த ஆலயங்களில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமாவது நம்முடைய வாழ்நாளில் ஒரே ஒருமுறை செல்லும் பாக்கியம் நமக்கு கிட்டும்.
அகத்தீஸ்வரர் கருணை இருந்தால் இந்த ஆலயங்களில் ஒரு ஆலயத்தை பற்றிய புராண வரலாறு நமக்கு கிடைக்கும்.
1.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,ஆடையூர் கிராமம் ,அண்ணாமலை கிரிவலப்பாதை திருவண்ணாமலை.(வாயு லிங்கத்திற்கும் சந்திர லிங்கத்திற்கும் இடையே ஆடையூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது.கிரிவலப்பாதையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்)
2. அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்,சென்னை -49. (ஐஸ்வர்ய வீரபத்திரர் சன்னதியும்,அம்பிகையின் நேரடிப்பார்வையில் குரு பகவான் சன்னதியும் இருக்கும் ஆலயம்)
3. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், பொழிச்சலூர்,பல்லாவரம் அருகில்,சென்னை(விமான நிலையம் பின்புறம் 2 கி மீ தொலைவில்,பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ தொலைவில்)
4. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,தண்டையார்பேட்டை, சென்னை.
5. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,நல்லூர் கிராமம், சென்னை.
6. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,சோழிபாளையம் சென்னை.
7. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,கொளத்தூர் ,சென்னை.
8. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,வேலப்பன்சாவடி, சென்னை.
9. அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில், சித்தாலபாக்கம், சென்னை.
10. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வேங்கடமங்கலம், சென்னை.
11. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மிட்டனமல்லி, ஆவடி, சென்னை.
12. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பூந்தண்டலம், சென்னை.
13. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கொளப்பாக்கம், சென்னை.
14. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பவுஞ்சூர், சென்னை.
15. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அணைக்கட்டு சேரி, சென்னை.
16. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பழைய பெருங்களத்தூர், சென்னை.
17. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நெடுங்குன்றம், சென்னை.
18. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் சோனலூர்,மாம்பாக்கம், சென்னை.
19. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை.
20.தாராபுரம்,கோவை நெடுஞ்சாலை
21.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நாபளூர்,திருத்தணி(திருத்தணியில் இருந்து 10 கி மீ தொலைவில் லஷ்மாபுரம் பேருந்து நிலையத்திற்கு தெற்கே 1 கி மீ தொலைவில்)
22.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகிலாண்டபுரம்,காங்கேயம்
23.அருள்மிகு அசலம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில்,நுங்கம்பாக்கம்,சென்னை;.
24.அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகத்தியான்பள்ளி,வேதாரண்யம்.நாகை மாவட்டம்.(வேதாரண்யம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ)
25.ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில்,துஞ்சனூர்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.
26.ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில்,ஏம்பல்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில், (ஆவுடையார் கோயில் என்ற ஊரில் இருந்து தென்மேற்கே பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது)புதுக்கோட்டை மாவட்டம்.
27.ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையூர்,பெருகமணி; (வழி=திருச்சி டூ கரூர் சாலை)
28.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,மேல்தானம் கிராமம்;திருக்கோளக்குடி அருகில்,புதுக்கோட்டை மாவட்டம்.
29.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில், எட்டயத்தளி,பேராவூரணி அருகில்(புதுக்கோட்டை)=கேட்டை நட்சத்திர ஸ்தலம்
30.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,கருவளர்ச்சேரி என்ற பீஜபுரம்.(வழி=கும்பகோணம் டூ மருதாநல்லூர் டூ ஆலங்குடி பேருந்து வழித்தடத்தில் மருதாநல்லூரில் இருந்து 1 கி மீ தொலைவில்)
31.அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் மூலவர்கள்,அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில்,மாகறல்(வழி),காஞ்சிபுரம்(உத்திர மேரூர் காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கின்றது)
32.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,பஞ்செட்டி,பொன்னேரி,திருவள்ளூர் மாவட்டம்,(வழி:சென்னை டூ கொல்கொத்தா நெடுஞ்சாலையில் 30 கி மீ தொலைவில்) ரெட் ஹில்ஸ்ஸில் இருந்து 21 கி மீ தூரத்தில்,சென்னையில் இருந்து புழல் வழியாக 45 கி மீ தொலைவில்;பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது;(பஞ்சேஷ்டி என்றும் கூறுவது உண்டு) (செங்குன்றம் டூ காரனோடை அருகில்)
33.ஸ்ரீலோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்,அம்பாசமுத்திரம்,திருநெல்வேலி மாவட்டம்;
34.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருவொற்றியூர்,சென்னை;
35.அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வில்லிப்பாக்கம்(வில்லிவாக்கம் அல்ல),சென்னை(வழி:சென்னை டூ பாண்டிச்சேரி சாலையில் கடப்பாக்கம் சென்றடைய வேண்டும்;அங்கிருந்து வெண்ணாங்குப்பட்டு செல்ல வேண்டும்;அங்கிருந்து மேற்காகச் செல்லும் குணாம்பேடு சாலையில் 5 கி மீ பயணித்தால் வில்லிப்பாக்கம் வரும்;
36.அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புத்திரன் கோட்டை,செய்யூர் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.(வழி:மதுராந்தகத்தில் இருந்து 25 கி மீ தொலைவில் இருக்கின்றது;மதுராந்தகம் மற்றும் சூணாம்பேட்டையில் இருந்து புத்திரன் கோட்டைக்கு பேருந்து வசதி இருக்கின்றது;புத்திரன் கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது)
37.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாலவேடு,வந்தவாசி வட்டம்,திரு அண்ணாமலை மாவட்டம்.
38.அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சோமூர்,கரூர் மாவட்டம்(மிகவும் பாழடைந்திருக்கின்றது;வாருங்கள் புனர் நிர்மாணம் செய்வோம்=2018)
39.அருள்மிகு பாடகவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருச்சுனை.(வழி:மதுரை டூ திருச்சி சாலையில் 45 கி மீ பயணித்து கருங்காலக்குடி செல்ல வேண்டும்;அங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கி மீ பயணித்தால் கோவிலை அடையலாம்)
40.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நெமிலிச்சேரி,சென்னை(வழி:குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி மீ)
41.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மேலக்காட்டூர்,தஞ்சாவூர் மாவட்டம்;(திருப்பனந்தாளில் இருந்து 5 கி மீ)
42.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர்,பூந்தோட்டம்.(மயிலாடுதுறை டூ பேரளம்)
43.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பொதட்டூர் பேட்டை,திருத்தணி அருகில்,சென்னை;
44.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாம்பவர் வடகரை;திருநெல்வேலி மாவட்டம்;
45.அருள்மிகு ஆவுடைநாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நஞ்சுண்டாபுரம்,தாராபுரம் தாலுகா;
46.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புரிசை.(செய்யாறு டூ வந்தவாசி சாலையில் தென் கிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்றது)
47.அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழைய பாளையம்,துவரங்குறிச்சி அருகில்;(வேறு அருகு ஊர்கள்:செவல்பட்டி,மேலூர்)திருப்பணிக்கு காத்துக் கொண்டிருக்கின்றது;1.9.2018
48.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பரதூர்(முற்காலத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமம் இங்கே இருந்திருக்கின்றது)சேத்தியாத்தோப்பு;
(சேத்தியாதோப்பு என்ற ஊரிலிருந்து தென்கிழக்கு திசையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.)கடலூர் மாவட்டம்.(திருப்பணிக்கு காத்துக்கொண்டிருக்கின்றது 1.9.2018
49.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பென்னலூர்,ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.(2017 முதல் புனரமைப்பு ஆரம்பம்)
50.அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வன்னிவேடு,வாலாஜாபேட்டை;
51.அருள்மிகு சிவகாமிசுந்தரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி.திருச்சி அருகில்
52.அருள்மிகு ப்ரத்யங்கரதேவி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பாதூர்,உளுந்தூர்ப்பேட்டை.
53.அருள்மிகு வடிவுடைநாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணப்பாறை(ஆண்டார்கோவில் பேருந்து நிறுத்தம் அருகில்),திருச்சி மாவட்டம்.
54.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சிறுமலை,திண்டுக்கல் மாவட்டம்.(வழி:திண்டுக்கல் டூ நத்தம் சாலை)
55.அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புதுப்பாளையம் கிராமம்,வெம்பாக்கம்,திரு அண்ணாமலை மாவட்டம்.
56.அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,திருப்பதி நகர்,வடசேரி,நாகர்கோவில்.
57.அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி டூ வயலூர் சாலை,மல்லையம்பட்டு,ஸ்ரீரங்கம் தாலுகா,திருச்சி மாவட்டம்.(கண் பார்வைக்கு உரிய பரிகார ஸ்தலம்)
58.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,அயத்தூர்,வேப்பம்பட்டு,திருவள்ளூர் மாவட்டம்.
59.அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோவில்,ஆற்காடு சாலை,வளசரவாக்கம்,சென்னை-87.
60.அருள்மிகு அகத்தியர் கோவில்,ஓரத்தூர்,மாடம்பாக்கம்,நீலாமங்கலம்,கூடுவாஞ்சேரி,காஞ்சிபுரம் மாவட்டம்-603202
61.அருள்மிகு பெரிய நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,நெய்வாசல் கிராமம்,கீழச்செவல்பட்டி அருகே,திருமயம் புதுக்கோட்டை மாவட்டம்;
62.அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம்,கும்பமுனி மங்கலம்,பொன்னேரி.(சென்னைக்கு அருகில்)
63.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,மேலையூர்,பூம்புகார் அருகில்(மயிலாடுதுறை டூ பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 19 வது கி மீ) மேலையூரில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் காவிரிக் கரையோரம் அமைந்திருக்கின்றது;
64.அருள்மிகு வண்டார்க்குழலி (ஸ்ரீபிரம்மராம்பிகை) சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையங்குடி,ஆலத்தம்பாடி அருகில்,திருவாரூர்.
65.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம்,செம்மங்குடி(கும்பகோணம் குடவாசல் அருகில்)
66.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,கீழ்த்தானம்(பொன்னமராவதி - காரையூர் அருகில்)
67.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், அனகாபுத்தூர் ,சென்னை.
68.அருள்மிகு யோகாம்பாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,குளவாய்ப்பட்டி(புதுக்கோட்டை டூ அறந்தாங்கி)=புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலைவிடவும் மிகவும் பழமையான ஆலயம்;யோகா ஆசான்கள் அடிக்கடி வந்து செல்ல வேண்டிய ஆலயம் இது;
69.அருள்மிகு அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சித்தாலப்பாக்கம்,தாம்பரம் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.( புனர் நிர்மாணப்பணிகளுக்கு அன்பளிப்பு வழங்கிட செல் எண்:9884995203) இன்று 11.4.2019 தேதிப்படி இவர்களுக்கு ரூ.21 லட்சம் தேவை; சிவத்தொண்டில் விருப்பம் உள்ளவர்கள்,அகத்தியர் தனது குருவாக எண்ணுபவர்கள் தொடர்பு கொண்டு புனர் நிர்மாணப் பணிகளில் இணைத்துக் கொள்ளலாம்
70.அருள்மிகு மனோன்மணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணமை(மகாபலிபுரத்தில் இருந்து புதுச்சேரி சாலையில் 8 கி மீ சென்றால் மணமை கிராமம் வரும்;அதன் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது)
71.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,ஷேசம்பாடி அருகில்,(கும்பகோணம் டூ ஆலங்ககுடி)
72. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் அருங்குளம், திருத்தணி.(திருத்தணியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில்)
73.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், செம்பேடு, திருவள்ளூர். (திருவள்ளூர் என்ற ஊரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்)
74.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஊதிக்காடு, திருவள்ளூர்.( திருவள்ளூர் என்ற ஊரிலிருந்து வடக்கே 6 கிலோமீட்டர் தொலைவில்)
75.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், விடையூர், திருவள்ளூர். (திருவள்ளூர் என்ற ஊரில் இருந்து மேற்கே 9 கிலோமீட்டர் தொலைவில்)
76. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், வடமதுரை, ஊத்துக்கோட்டை. (பெரியபாளையம் என்ற ஊரிலிருந்து தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
77. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வஞ்சிவாக்கம், பொன்னேரி.(பொன்னேரி என்ற ஊரில் இருந்து வடகிழக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில்)
78. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், சோழவரம், பொன்னேரி .(பொன்னேரி என்ற ஊரிலிருந்து தெற்கே 14 கிலோமீட்டர் தொலைவில்)
79. அருள்மிகு ராஜேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை.
80.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஓரத்தூர், ஸ்ரீபெரும்புதூர் வட்டம். (ஸ்ரீபெரும்புதூர் என்ற ஊருக்கு தெற்கே 25 கிலோமீட்டர் தொலைவில்)
81. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சிறுவள்ளூர், காஞ்சிபுரம். (காஞ்சிபுரத்திற்கு வடக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில்)
82. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளாயிவூர், வாலாஜாபேட்டை. (வாலாஜாபேட்டை என்ற ஊரிலிருந்து கிழக்கே 11 கிலோ மீட்டர் தொலைவில்)
83.அருள்மிகு செல்லியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் வெங்குடி, வாலாஜாபேட்டை. (வாலாஜாபேட்டை என்ற ஊரிலிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
84. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், நெல்வேலி, வாலாஜாபேட்டை (வாலாஜாபேட்டை என்ற ஊரில் இருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில்)
85.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் , விசூர், உத்திரமேரூர். (மானாம்பதி க்கு தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
86.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,காட்டான் குளம், உத்தரமேரூர்.(உத்திரமேரூர் என்ற ஊருக்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில்)
87. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பெருந்தண்டலம், செங்கல்பட்டு (செங்கல்பட்டு என்ற ஊரிலிருந்து கிழக்கே பதினொரு கிலோமீட்டர் தொலைவில்)
88. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ஒழுகலூர், செங்கல்பட்டு. (செங்கல்பட்டு என்ற ஊரில் இருந்து தெற்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில்)
89. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மாடயம்பாக்கம், மதுராந்தகம் (செய்யூர் என்ற ஊருக்கு வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில்)
90. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் கீழ்கொடுங்கலூர், வந்தவாசி.(வந்தவாசி என்ற ஊரிலிருந்து கிழக்கே 12 கிலோமீட்டர் தொலைவில்)
91. அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், உளுந்தை, வந்தவாசி வட்டம் (வந்தவாசி என்ற ஊரிலிருந்து கிழக்கே 18 கிலோமீட்டர் தொலைவில்)
92. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஆர்பாக்கம், திருவண்ணாமலை வட்டம். (திருவண்ணாமலை என்ற ஊரில் இருந்து வடக்கே 21கிலோமீட்டர் தொலைவில்)
93. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம். (திருவண்ணாமலை என்ற ஊருக்கு தென்கிழக்கு 23 கிலோமீட்டர் தொலைவில்)
94. அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், புதுப்பாளையம், செய்யாறு வட்டம். (மாமண்டூர் என்ற ஊரில் இருந்து தெற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில்)
95. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் செய்யாதுவனம்,செய்யாறு வட்டம்.(செய்யாறு என்ற ஊரில் இருந்து மேற்கே 3 கிலோமீட்டர் தொலைவில்)
96. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வாச்சனூர், செய்யாறு வட்டம்.( செய்யாறு என்ற ஊரில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில்)
97. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பரஞ்சி,அரக்கோணம் வட்டம். (அரக்கோணம் என்ற ஊரில் இருந்து மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில்)
98. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நாகவேடு, அரக்கோணம். வட்டம் (அரக்கோணம் என்ற ஊரிலிருந்து தென்மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில்)
99. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வெண்ணம்பள்ளி, வாலாஜாபேட்டை.(வாலாஜாபேட்டை என்ற ஊரிலிருந்து வடமேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில்)
100. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பெருங்காஞ்சி, வாலாஜாபேட்டை. (சோளிங்கர் என்ற ஊரில் இருந்து தெற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில்)
101. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், குகைநல்லூர், குடியாத்தம் வட்டம்.(திருவலம் ஊரில் இருந்து வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
102. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மணலூர்பேட்டை, திருக்கோயிலூர் வட்டம்.(திருக்கோயிலூர் என்ற ஊருக்கு மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில்)
103.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கூவனூர், திருக்கோவிலூர் வட்டம். (திருக்கோவிலூர் என்ற ஊருக்கு மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில்)
104. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சிமெய்யூர், திருக்கோயிலூர் வட்டம்.(சித்தலிங்க மடத்தில் இருந்து கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில்)
105. அருள்மிகு முத்தாலம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், அவலூர்பேட்டை, செஞ்சி வட்டம். (செஞ்சி என்ற ஊருக்கு வடக்கே 28 கிலோமீட்டர் தொலைவில்)
106. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , வீராமூர், செஞ்சி வட்டம். (செஞ்சி என்ற ஊருக்கு வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில்)
107. அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில் சீ, செஞ்சி வட்டம்.(செஞ்சி என்ற ஊருக்கு வடமேற்கே ஒன்பது கிலோமீட்டர் தொலைவில்)
108. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிளியனூர், திண்டிவனம். வட்டம் (திண்டிவனம் என்ற ஊரிலிருந்து தென்கிழக்கே 18 கிலோமீட்டர் தொலைவில்)
109. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,தென்பேர், விழுப்புரம் வட்டம் (விழுப்புரம் என்ற ஊரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில்)
110.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,ஒலக்கூர் ,திண்டிவனம் வட்டம்.(திண்டிவனம் என்ற ஊருக்கு வடக்கே 12 கிலோமீட்டர் தொலைவில்)
111. அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், விக்கிரவாண்டி.(சுயம்புலிங்கமாக இங்கே அன்னை புவனேஸ்வரி அருள் புரிந்து கொண்டிருக்கிறாள்)
112. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மரகதபுரம், விழுப்புரம் வட்டம் (விழுப்புரம் என்ற ஊரிலிருந்து தென்மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில்)
113. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,சாத்தமங்கலம், சிதம்பரம் வட்டம் (சேத்தியாதோப்பு என்ற ஊருக்கு தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
114. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பெருங்களூர், சிதம்பரம் வட்டம் (சிதம்பரம் என்ற ஊரிலிருந்து தென்மேற்கே 15 கிலோமீட்டர் தொலைவில்)
115. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வட மூர், காட்டுமன்னார்கோயில் வட்டம். (லால்பேட்டை என்ற ஊரில் இருந்து வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில்)
116. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருச்சின்னபுரம், காட்டுமன்னார்கோயில் வட்டம். (லால்பேட்டைக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில்)
117.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் தீவலூர் காட்டுமன்னார்கோயில் வட்டம் (பெண்ணாகடத்தில் இருந்து வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில்)
118. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , பாட்லூர் ,திருச்செங்கோடு வட்டம்.(திருச்செங்கோடு என்ற ஊரில் இருந்து தென்மேற்கே 15 கிலோமீட்டர் தொலைவில்)
119. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் கொடூர், நாமக்கல் வட்டம்.( பரமத்தி என்ற ஊருக்கு வடக்கே 12 கிலோமீட்டர் தொலைவில்)
120. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் கீழையூர், அரியலூர் வட்டம் (கீழப்பழுவூர் என்ற ஊருக்கு மேற்கே மூணு கிலோ மீட்டர் தொலைவில்)
121..அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,வடுகன்பற்று, அகத்தீஸ்வரம்,குமரி மாவட்டம்.
122. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், விளந்தை, உடையார்பாளையம், பெரம்பலூர் மாவட்டம்.(ஆண்டிமடம் என்ற ஊரிலிருந்து கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
123.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கீழையூர், சீர்காழி வட்டம். (திருவெண்காடு என்ற ஊருக்கு தென்கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில்)
124. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சேமங்கலம், மயிலாடுதுறை வட்டம் (திரு நின்றியூர் என்ற ஊரில் இருந்து வடகிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
125. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மறையூர், மயிலாடுதுறை வட்டம் (மயிலாடுதுறை என்ற ஊரிலிருந்து தென்மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில்)
126. அருள்மிகு அபிராமி அம்மை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், கூழையூர், மயிலாடுதுறை வட்டம்.
127. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர், மயிலாடுதுறை வட்டம்.
128. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , ஐவ நல்லூர், நாகப்பட்டினம் வட்டம்.(நாகப்பட்டினம் என்ற ஊரிலிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
129. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பிரதாபராமபுரம், நாகப்பட்டினம் வட்டம்.(வேளாங்கண்ணி என்ற ஊரில் இருந்து தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
130. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருப்பூண்டி, நாகப்பட்டினம் வட்டம்.(வேளாங்கண்ணி என்ற ஊரில் இருந்து தெற்கே 8 கிலோமீட்டர் தொலைவில்)
131. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வாய்மேடு, வேதாரண்யம் வட்டம் (வேதாரணியம் என்ற ஊரிலிருந்து மேற்கே 25 கிலோமீட்டர் தொலைவில்)
132. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிள்ளியனூர், நன்னிலம் வட்டம் (பேராளம் என்ற ஊரில் இருந்து மேற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில்)
133.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,நாகக்குடி, நன்னிலம் வட்டம் ( நன்னிலம் என்ற ஊரில் இருந்து தெற்கே 7 கிலோமீட்டர் தொலைவில்)
134.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , கீரங்குடி, நன்னிலம் வட்டம் (திருவாஞ்சியம் என்ற ஊரில் இருந்து தெற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில்)
135.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பூங்குலம், நன்னிலம் வட்டம் (நன்னிலம் என்ற ஊரில் இருந்து தென்மேற்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில்)
136.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , பழையவல்லம், திருவாரூர் வட்டம் (திருவாரூர் என்ற ஊரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில்)
137.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அத்திபுலியூர், திருவாரூர் வட்டம் (கீழவேலூர் என்ற ஊருக்கு மேற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில்)
138.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சுகந்த விளாகம், திருவாரூர் மாவட்டம் (திருவாரூர் என்ற ஊருக்கு கிழக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில்)
139.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிள்ளுகுடி, திருவாரூர் வட்டம் (கீழவேல்லூர் என்ற ஊரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில்)
140.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பின்னவாலூர், திருவாரூர் மாவட்டம் (திருவாரூர் என்ற ஊருக்கு தெற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில்)
141. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , மாலவராயநல்லூர், மன்னார்குடி வட்டம். (மன்னார்குடி என்ற ஊருக்கு கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில்)
142. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஆலத்தம்பாடி, திருதுறை பூண்டி வட்டம் (திருதுறைபூண்டி என்ற ஊருக்கு வடக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில்)
143.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பழையங்குடி, திருத்துறைப்பூண்டி வட்டம் (திருத்துறைபூண்டி என்ற ஊருக்கு வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில்)
144. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், எக்கல்,திருத்துறைப்பூண்டி வட்டம் (திருதுறைபூண்டி என்ற ஊருக்கு வடக்கு எட்டாவது கிலோமீட்டர் தொலைவில்)
145. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மேல காட்டூர், திருவிடைமருதூர் வட்டம் (திருப்பனந்தாள் என்ற ஊருக்கு வடகிழக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில்)
146. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கண்ணார குடி (சிக்கல் நாயக்கன் பேட்டை) (திருப்பனந்தாள் என்ற ஊருக்கு கிழக்கே நாலு கிலோ மீட்டர் தொலைவில்)
147. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,செம்பங்குடி, கும்பகோணம் வட்டம் (நாச்சியார்கோயில் என்ற ஊருக்கு தெற்கே மூணு கிலோ மீட்டர் தொலைவில்)
148. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சந்திரசேகரபுரம், பாபநாசம் வட்டம் தஞ்சை மாவட்டம் (வலங்கைமான் என்ற ஊரிலிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
149. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், முனியூர், பாபநாசம் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம்(அம்மா பேட்டை என்ற ஊரில் இருந்து வடமேற்கு 7 கிலோமீட்டர் தொலைவில்)
150. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், தெக்கூர்,பாபநாசம் வட்டம் தஞ்சை மாவட்டம் (ஒரத்தநாடு என்ற ஊருக்கு தென்மேற்கில் 9 கிலோமீட்டர் தொலைவில்)
151. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பனங்குடி (இங்கே பரமேஸ்வரன் கோயில் என்று அழைக்கிறார்கள்) குளத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் (அன்னவாசல் என்ற ஊரிலிருந்து தென்கிழக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில்)
152. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பலுவாஞ்சி,மணப்பாறை திருச்சி மாவட்டம் (மணப்பாறை என்ற ஊருக்கு தெற்கே 17 கிலோமீட்டர் தொலைவில்)
153. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,திருமுக்கூடல், கரூர் வட்டம் (கரூர் என்ற ஊருக்கு கிழக்கே ஒன்பது கிலோமீட்டர் தொலைவில்)
154. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,காரத்தொழுவு ,உடுமலை வட்டம் (உடுமலை என்ற ஊருக்கு வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவில்)
155. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,ஐயப்பட்டி,மேலூர் வட்டம், மதுரை மாவட்டம் (மேலூர் என்ற ஊருக்கு வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில்)
156. அகத்தீஸ்வரர் திருக்கோயில் , திருச்சுனை,மேலூர் வட்டம் ,மதுரை மாவட்டம் (மேலூர் என்ற ஊருக்கு வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் மலை மீது)
157. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வேதியன்குளம், தேவகோட்டை வட்டம் (தேவகோட்டை என்ற ஊரில் இருந்து மேற்கே 13 கிலோ மீட்டர் தொலைவில்)
158.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருமணவயல், தேவகோட்டை வட்டம் (தேவக்கோட்டை என்ற ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில்)
159. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் (சொக்கலிங்கம் கோயிலுக்கு அருகே) புளியங்குடி, நெல்லை மாவட்டம்.
160. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வீரசிகாமணி, சங்கரன்கோயில் வட்டம் ( சங்கரன்கோவில் என்ற ஊரில் இருந்து தென்மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில்)
161.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , பின்னவாசல்,பேராவூரணி வட்டம். (பேராவூரணி என்ற ஊருக்கு தென் மேற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில்)
162. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,மணக்காடு, பேராவூரணி வட்டம் (பேராவூரணி என்ற ஊருக்கு தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில்)
163. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பழைய பாபநாசம், பாபநாசம் வட்டம், செங்கோட்டை தாலுகா நெல்லை மாவட்டம்.
164.அருள்மிகு ஸ்ரீ யோகாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், குளவாய்பட்டி, மதுரை டு ஆவுடையார் கோயில் சாலை மார்க்கம்.
165. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், புல்வயல், காரைக்குடி டு பிள்ளையார்பட்டி பகுதி.
166. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் அச்சரவாக்கம் (திருப்போரூர் டு செங்கல்பட்டு மார்க்கம்)
இந்தப்பட்டியலில் இல்லாமல் உங்கள் பகுதியில் அகத்தீஸ்வரர் கோயில் இருந்தால் மறக்காமல் தெரிவிக்கவும்.
இன்னும் பல அகத்தீஸ்வரர் ஆலயங்களை தேடிக்கொண்டிருக்கிறோம்.
தமிழனாகப் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தன் வாழ்நாள் முழுவதும், தினமும் பின்வரும் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.
தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் ஒருமுறையும் மதியம் 12 மணி அளவில் ஒருமுறையும் இரவில் தூங்க ஆரம்பிக்கும் போது ஒருமுறையும் பின்வரும் மந்திரத்தை கண்டிப்பாக ஜெபிக்க வேண்டும்.
அப்படி ஜெபித்து வந்தால் மட்டுமே நமக்கு முக்தி கிடைக்கும்.
ஓம் அகத்தீசாய நமஹ
Post a Comment