திருக்கச்சி நம்பிகளும் ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகளும்
மாசி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அவதாரம் செய்தவர்
திருக்கச்சி நம்பிகள்.
மார்கழி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில்
அவதாரம் செய்தவர்
ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள்.
சிறு வயதிலேயே பகவானுக்கு தொண்டு செய்ய தொடங்கி தம்முடைய செல்வத்தை எல்லாம் கைங்கர்யம் செய்தார் திருக்கச்சி நம்பிகள்.
ஒன்பது வயதிலேயே பகவானுக்கு தொண்டு செய்ய தியானம் செய்ய தொடங்கினார்
ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள்.
காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்தவர் திருக்கச்சி நம்பிகள்.
ஶ்ரீரங்கம் ரெங்கநாதனுக்கு கைங்கர்யம் செய்தவர்
ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள்.
ஆளவந்தார் என்ற குருவிடம் சீடராக இருந்து ஆசாரிய பக்தி செய்தவர் திருக்கச்சி நம்பிகள்.
வடபத்ர அரையர் என்ற குருவிடம் சீடராக இருந்து ஆசாரிய பக்தி செய்தவர்
ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள்.
காஞ்சி வரதராஜ பெருமாளிடம் ஆறு வார்த்தைகளை கேட்டு உபதேசம் செய்து ஶ்ரீவைஷ்ணவ சம்ரதாயத்திற்கு பெருமை சேர்த்தார்
திருக்கச்சி நம்பிகள்.
ஶ்ரீரங்கம் ரெங்கநாதனை நாயகனாக எண்ணி நாயகி பாவம் மேற்கொண்டு உள்ளத்திலும் உடையிலும் நாயகி பாவம் மேற்கொண்டு
ஶ்ரீவைஷ்ணவ சம்ரதாயத்திற்கு பெருமை சேர்த்தவர்
ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள்.
ஶ்ரீராமானுஜருக்கு குருவாக இருந்தவர்
திருக்கச்சி நம்பிகள்.
ஶ்ரீராமானுஜர் சித்தாந்தம் கொண்டு தம்முடைய வாழ்நாள் முழுவதும் இருந்தவர்
ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள்.
காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வரதராஜப் பெருமாளை அர்ச்சை நிலையில் இருந்து மீறி
பேச வைத்தார் திருக்கச்சி நம்பிகள்.
ஶ்ரீரங்கம் ரெங்கநாதனை நாயகனாக பாவித்து நாயகியாக இருந்து ரெங்கநாதனை அர்ச்சை நிலையில் இருந்து மீறி
பேச வைத்தவர்
ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள்.
Post a Comment