வால் ஆசனத்தில் அமர்ந்த அனுமன்



சீதை இருக்கும் இடம் தெரிந்து விட்டது. 
அவளை உடனடியாக மீட்க வேண்டும். 
போர்தான் அதற்கு ஒரே வழி என்றாலும், ஒரு முறை ராவணனுடன் பேசி சீதையை விட்டுவிடும்படி கேட்கலாம்.
அதற்கு அவன் முடியாது என்றால் போர் தொடுக்கலாம் என்று சிந்தித்தார் ராமர். 
அதன்படி இலங்காபுரியில் இருக்கும் ராவணனின் அரண்மனைக்கு தூதுவனாக சென்றார் அனுமன்.

அவர் ராமரின் பக்தன், ராமனின் தூதுவன், சீதையை விட்டு விடும்படி கூற வந்துள்ளான் என்பது தெரிந்ததும் ராவணனுக்கு கோபம் உண்டானது.
அவன் தூதன் என்றாலும் ஒரு குரங்கு தனக்கு சரி நிகராக அரசவையில் அமர தகுதியில்லை என்று கருதி அனுமனை நிற்க வைத்தே பேச முயன்றான்.

ஆனால் தான் வந்திருப்பது தூதனாக, அதுவும் கிஷ்கிந்தை வானர அரசின் முதன்மை அமைச்சன் நான். 
எனக்குரிய மரியாதையை ராவணன் தரவில்லையே என்று நினைத்த அனுமன், ராமரை பிரார்த்தித்தார். 
அப்போது அவரது வால் நீண்டு கொண்டே சென்றது. 
அந்த வாலை சுருட்டி, சுருட்டி ஒரு ஆசனத்தை உருவாக்கி அதன்மேல் அமர்ந்தார் அனுமன்.

அவ்வாறு அவர் உருவாக்கிய வாலாசனம், ராவணனின் ஆசனத்தைக் காட்டிலும் இரு மடங்கு பெரியதாக இருந்தது.

தூதனுக்கு உரிய மரியாதைக் கொடுக்காததால், தனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை நினைத்து ராவணன் கலங்கிப் போனான்.
வெட்கத்தை வெளிக்காட்டாத வகையில் அவன் அனுமனை ஏளனமாக பார்த்து பேசி அனுப்பி விட்டாலும், அனுமனின் சமயோசித
புத்தியை நினைத்து ராவணன் உள்ளுக்குள் மெய்சிலிர்த்தது உண்மைதான்.

ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஹனுமான்!

Post a Comment

Previous Post Next Post