திருச்செந்தூர் முருகனும் வீரபாண்டிய கட்டபொம்மனும்...

முருகப்பெருமான் மீது வீரபாண்டிய கட்டபொம்மன் அளவு கடந்து வைத்திருந்த பக்திக்கு ஈடு இணையே கிடையாது.

தன் பக்தனின் மெச்சுதலை அங்கீகரிக்கும் விதமாக கட்டபொம்மன் மூலமாக முருகன் சில அற்புதங்களை நிகழச் செய்திருக்கிறான்.

கட்டபொம்மன், தினமும் திருச்செந்தூரில் முருகப்
பெருமானுக்கு பூஜை, நிவேதனம் நடந்து முடிந்த பிறகே, தன் மதிய உணவை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கட்டபொம்மனின் கோட்டை இருப்பதோ பாஞ்சாலங் குறிச்சியில். இங்கிருந்து அவ்வளவு தொலைவில் இருக்கிறது திருச்செந்தூர் முருகனாலயம்.

கோயிலில் முருகனுக்கு நிவேதனம் நடந்து
விட்டதை அவர் தெரிந்து கொள்ளும விதமாக.........

திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்தார். மண்டபத்தின் உள்ளே வெங்கல மணிகளை பொருத்தினார்.

ஒவ்வொரு மண்டபத்திலும் சேவகர்களை நிறுத்தியிருந்தார்.

திருச்செந்தூரில் உச்சிகால பூஜை நடந்து முடிந்தவுடனே திருச்செந்தூர் கோயில் ஆலய கோபுர மணி ஒலிக்கத் தொடங்குவது வழக்கம்.

இதைத் தொடர்ந்து அடுத்திருக்கும் மண்டபத்திற்கு இந்த மணியோசை கேட்கும்.

இதற்காக ஆறுமுகநேரி, ஆத்தூர், ஒட்டபிடாரம், பாஞ்சாலங்குறிச்சி உள்பட பல இடங்களில் மணி மண்டபம் அமைந்திருந்தார் கட்டபொம்மன்.

அந்த மண்டபத்திலிருக்கும் சேவகன், உடனே மண்டபத்தின் மணிகட்டை அவிழ்த்து மணி
யோசையை எழுப்புவான்.

இப்படி அடுத்தடுத்து ஒவ்வொரு மண்டபமாக மணி ஒலித்து, இறுதியில் பாஞ்சாலங்குறிச்சி மண்டபத்தில் மணி ஒலிக்கும்.

(இவற்றில் சில மண்டபங்களை இதன் வழியில் தற்போதும் காணலாம்.)

மேலும், திங்கட்கிழமை தோறும் அதிகாலையில் கட்டபொம்மனுக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலிலிருந்து இலை விபூதி பிரசாதத்தை குதிரை வீரர்கள் கொண்டு வந்து கட்டபொம்மனிடம் கொடுத்துச் செல்வார்கள்.

விபூதி கையில் கிடைத்த
பிறகே அன்றாட பணிகளை கட்டபொம்மன் துவங்குவார்.

திருச்செந்தூர் முருகன் கோயில் கோபுரத்தின் ஏழாவது நிலையில் ஒரு மணி தொங்க விடப்பட்டிருக்கும்.

இதனை கட்டபொம்மனே அமைத்துக் கொடுத்திருந்தார். இது பல வருடங்களாக ஒலிக்கச் செய்யாமலே இருந்து வந்தது.

இந்த கோபுரத்திலிருந்த மணியோசனையின் மூலமே, அடுத்திருக்கும் மணியை ஒலிக்கச் செய்து, முருகனுக்கு நிவேதனம் ஆகிவிட்டது என குறிப்புணர்த்துவர்.

இயங்காமலிருந்த இந்த மணியை, முன்பு கோயில் கும்பாபிஷேகம் நடந்த
போது மீண்டும் ஒலிக்கச் செய்யப்பட்டது. தற்போது உச்சிகால பூஜையில் இந்த மணி ஒலிக்கிறது.

மேலும் இவர் முருகன் மேல் கொண்டிருந்த பக்தியால், தன்னுடைய நெற் களஞ்சியங்களிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அன்னதானம் அளிக்க பல ஆயிரம் கோட்டை நெல்லை அனுப்பிக் கொண்டிருக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தார் கட்டபொம்மன்.

குடிமக்களும் தம் வயல்களிலிருந்து நெல்லைக் காவடியாகச் சுமந்து கோயிலுக்குச் செலுத்தும் நடை
முறையையும் கொண்டு வந்து பணித்திருந்தார்.  

ஒரு சமயம், தன் மனைவிக்கு தங்க அட்டிகை ஒன்றை அன்பளிப்பாக வழங்க விரும்பி பொற்கொல்லரிடம் அதைத் தயாரிக்கும்படி சொல்லியிருந்தார் கட்டபொம்மன்.

அன்றிரவு அவர் கனவில் தோன்றிய முருகன் அந்த அட்டிகையை நீ எனக்குத் தந்திருக்கலாமே? என்றாராம்.

அட்டிகை தயாரான உடனேயே அதை எடுத்துப் போய் திருச்செந்தூர் கோயிலில் முருகனுக்கு அணிவித்து விட்டார்.

இன்னொரு சமயம், திருச்செந்தூரில் மாசி திருவிழா நடந்து கொண்டிருந்தது.

தேரோட்டத்துக்குத் தேர் தயாராக நிற்கிறது. கட்டபொம்மன் வந்து வடம் பிடித்து கொடுக்க வேண்டும். ஏனோ அன்று , வர முடியவில்லை.

சரி, நாமே தேரை இழுத்து விடலாம், என பக்தர்கள் தேரை இழுத்தனர். தேர் சிறிது தூரம்தான் உருண்டது. அதற்குமேல் நகராமல் நின்று விட்டது.

தேரின் சக்கரம் ஓரிடத்தில் பதிந்து நின்று கொண்டது. எவ்வளவோ பக்தர்கள் முயற்சித்தும் தேர் நகரவில்லை.

இதற்கிடையில் கட்டபொம்மனுக்கு செய்தி கொண்டு சேர்த்து, அவரும் இங்கு வந்து சேர்ந்தார்.

கட்டபொம்மன் தேர்
வடத்தை பற்றி பிடித்தார். உடனே தேர் நகர்ந்தது. இதுபோல பல அற்புதங்களை கட்டபொம்மனின் மூலம் முருகன், அவரின் பக்தியை மெச்சி அருளியிருக்கிறார்.

தாமிரபரணி ஆற்றங்கரையில், முத்தாலங்குறிச்சி என்று ஓர் அழகிய கிராமம் உண்டு.

இங்கு கவிராயர் கந்தசாமிப் புலவர் எனும் புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

இவரும் மிக தீவிரமான முருகபக்தர். இவருக்கு இரு கண்களிலும் பார்வை கிடையாது.

இவர் பாடும் பாடலைக் கேட்க முருகப்பெருமானே நேரில் வந்து விடுவாராம்! அவ்வளவு ஆசை இவரின் பாடலின் மீது.

ஒரு நாள் கவிராயர் கவி பாடிக் கொண்டிருந்தார். வெற்றிலை போடும் பழக்கம் இருந்து வந்தது.

கவிராயருடைய வெற்றிலையை மெல்லும்
போது, அதன் எச்சில் முருகனின் பரிவட்டம் மீது பட்டு விட்டது.

அது திருச்செந்தூர் மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவர் பரிவட்டத்தில் தெரி்த்தது தெரிந்தது.

இதைக் கண்ட பட்டர் பதை பதைத்து போனார். இப்படி ஏற்பட்டது எப்படி என்று தெரியாமல் மனம் நொந்தார்.

அன்றிரவு பட்டரின் கனவில் முருகன் தோன்றி, 'பட்டரே, என்
மீது ஆழ்ந்த பக்தி கொண்டவன் முத்தாலங்குறிச்சி கவிராயர் ஆவார்.

அவரும் பார்வையற்றவர். அவருக்குப் பார்வையளிக்க நான் முடிவு செய்து விட்டேன்.

ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளி தோறும் என்னை தரிசிக்க அவர் நடந்தே வருகிறார்.

அவரைக் கூப்பிட்டு வந்து எனக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் மாலையிலிருந்து ஒரு பூவை எடுத்து அவர் ஒரு கண்ணில் ஒத்து எடுப்பீராக!

அப்போது அந்தக் கண்ணில் அவருக்குப் பார்வை கிடைக்கும். மறு கண்ணை எப்போது முருகப்பெருமான் திறப்பார் என்று உங்களிடம் கேட்பார்.

அதற்கு அவரைப் பாஞ்சாலங்குறிச்சிக்குப் போகுமாறு சொல். அங்கே என் பக்தன் கட்டபொம்மன் அவருக்கு மறு கண்ணைத் திறப்பான் என்று கூறி மறைந்தருளிப் போனார்.

அடுத்த வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் வந்த கவிராயர் கடலில் நீராடி விட்டு வந்தார். அவரைக் கண்டுபிடித்து முருகன் சந்நதிக்குக் கூட்டி வந்தார் பட்டர்.

முருகன் ஆணைப்படியே ஒரு பூவை எடுத்து கவிராயர் கண்ணில் வைத்து ஒற்றியெடுத்தார்.

பளிச்சென்று கண்ணில் பார்வை கிடைத்தது கவிராயருக்கு. இன்னொரு கண்ணின் பார்வை கிடைக்க நீங்கள் பாஞ்சாலங்குறிச்சி செல்லுங்கள் இது முருகனின் ஆணை, என பட்டர் கூறியனுப்பினார்.

இதன் படி பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்றார் கவிராயர். கவிராயரிடமிருந்து விவரம் தெரிந்து கொண்ட கட்டபொம்மன் வியப்பில் ஆழ்ந்தார்.

மறு கண்ணைத் திறக்க என்னிடம் முருகன் அனுப்பினாரா? என்று கேட்டு வியந்து நெகிழ்ந்து போனார். 

உடனே ஜக்கம்மாள் கோயிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார். பின் கவிராயரை ஒரு கையில் பிடித்து கொண்டு மறுகையில் உருவிய வாளுடன் கோயிலுக்கு நுழைந்தார்.

உருவி வாளுடன் கட்டபொம்மனின் நிலை கண்டு அதிர்ந்து போனார் கவிராயர்.

என்ன இது? உருவிய வாளுடன் கோயிலுக்குள் வருகிறீரகள்? என்று சினந்து கேட்டும் விட்டார். புலவருக்குத் தான் கோபத்திற்கு குறைவிருக்காதே!, அதே போல கேட்டும் விட்டார்.

கோயிலின் புனிதத்தை அவர் சிதைக்கிறாரே என்ற ஆதங்கம் புலவருக்கு. ஆனால், கட்டபொம்மன் ஏதும் பேசாமல் ஜக்கம்மா தேவிக்கு அணிவிக்கப்பட்டிருந்த மாலையிலிருந்து ஒரு பூவை எடுத்து கவிராயரின் மறு கண்ணில் வைத்து ஒற்றினார்.

என்ன ஆச்சரியம்! மறுகண்ணில் அந்தக் கண்ணும் பார்வை பெற்றது!

கவிராயர் ஆனந்தப்பட்டாலும், கட்டபொம்மனின் ஒழுங்கீனத்தால் மீண்டும் கோபப்பட்டார். ‘நீ ஆணவம் பிடித்தவன். அதனால்தான் தேவியின் சன்னிதானத்திலும் அதிகார மமதையில் உருவிய வாளுடன் நிற்கிறாய் என்றார்.

அம்மனை அவமதிக்கும் உன்னால் எனக்குக் கிடைத்த இந்தப் பார்வை எனக்கு வேண்டவே வேண்டாம், என்று கூறியவர் கட்டபொம்மனின் வாளை பிடுங்கி தன் கண்ணில் குத்திக் கொள்ள முயன்றார்.

புலவருடைய கரம் பற்றித் தடுத்தார் கட்டபொம்மன். கவிராயரே நான் ஆணவத்துடன் வாளைப் பிடித்து வரவில்லை, முருகப்பெருமானின் உத்தரவுப்படி என்னால் உமக்குப் பார்வை வராது போனால், இந்த வாளால் என்னையே குத்திக் கொண்டு உயிர் துறக்க
வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவிய வாளுடன் இருந்தேன், என்று நிதானமாகச் சொன்னார்.

கவிராயர் அப்படியே ஸ்தம்பித்துப் போனார். ‘‘என்னது? உன் உயிரையே மாய்த்துக் கொள்ள நினைத்தாயா! நீ அல்லவா முருகனின் சிறந்த பக்தன்! என்னை மன்னித்து விடு கட்டபொம்மா! என்னை மன்னித்து விடு என்று கண்களில் நீர் ததும்ப கரங்கூப்பி சொன்னார். 

அப்போது முருகப்
பெருமானின் அசரீரி கேட்டது. கவிராயரே உமக்குப் பார்வை தர
வேண்டும் என்றால் முத்தாலங்குறிச்சியிலேயே பார்வை கொடுத்த பட்டரும், கட்டபொம்மனும் என் கடமைகளைச் செய்ய பிறந்தவர்கள் என உமக்கு உணர்த்தவே இந்தத் திருவிளையாடலை யாம் நிகழ்த்தினோம்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு கவிராயரும், கட்டபொம்மனும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

கவிராயரைப் பார்க்க கட்டபொம்மன் முத்தாலங்குறிச்சிக்கு வந்த போது அவர் தாமிரபரணி ஆற்றின் கரையில் குதிரையைக் நிப்பாட்டிய இடம், தற்போதும் *வீரபாண்டியன் கசம்* என்று அழைக்கப்பட்டு வருகிறது. 

அங்கிருக்கும் கோயிலில் அதுவரை முகில்
வண்ணநாதராகத் திகழ்ந்த ஈசன், அதன்பின் வீரபாண்டீஸ்வர் என அழைக்கப்பட்டும் வந்தார்.

தற்போது வீரபாண்டிய கசம் சிறு குட்டையாக மாறியிருக்கிறது!

கட்டபொம்மன் உருவாக்கிய திருவிழா வழிபாடுகள் திருச்செந்தூர் ஆலயத்தில் அவரது வாரிசுகளால் இன்றளவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.

இறைவன் நம் மூலமாக ஒரு திருவுகளை நிகழ்த்த அருளுவதெல்லாம் சாதாரணம் கிடையாது.

அவனை வணங்கி விட்டோம் என்றிருப்
போர்க்கெல்லாம், சாதாரண வாழ்நிலையே கழியும்.

அதை விட ஒரு படி மேலே வந்து, அவன் மீது பரிபூரண நம்பிக்கை வைத்துப் பாருங்கள். அவன், நம் மீது நம்பிக்கை கொணரும் பாத்திரங்களை நிகழக் காரணமாவான்.

அவன் மீது உயிரைவிட மேலான நம்பிக்கையை எவ்வளவு வைத்திருந்தால், கட்டபொம்மன் மீது முருகனுக்கு நம்பிக்கை பிறந்திருக்கும்.

நம் மீது அவனுக்கு நம்பிக்கை ஏற்படும் அளவிற்கு காராண
காரியங்களை செய்யத் துணிவோமாக!

ஸ்கந்தா சரணம் ! ஸ்கந்தா சரணம்...!
சரவணபவ குஹா சரணம்...!

Post a Comment

Previous Post Next Post