1. லட்சுமிக்கு உகந்த நாள் - செவ்வாய்க்கிழமை
உகந்தவை - சந்தனம், தூய்மையான ஆடை, தங்கம், பூ, பழம், பால், நவரத்தினங்கள், தண்ணீர், சுத்தமான வீடு

2. தீப எண்ணிக்கையின் பலன்கள்:

ஒரு தீபம் - மன அமைதி ஏற்படும்
ஒன்பது தீபம் - நவக்கிரக பிணி அகலும்
பன்னிரண்டு தீபம் - சக்தி கிடைக்கும்.
இருபத்தொரு தீபம் - நல்ல செயல்கள் நடக்கும்.
நாற்பத்தெட்டு தீபம் - தொழில் விருத்தி ஏற்படும், பயம் விலகும்.
நூற்றெட்டு தீபம் - நினைத்த காரியம் கைகூடும்
ஆயிரத்தெட்டு தீபம் - திருமணத்தடை விலகும்.

3. ஏழு மோட்ச புரிகள்:

அயோத்யா (ஸ்ரீராம ஜன்ம ஸ்தானம்)
மதுரா (ஸ்ரீகிருஷ்ண ஸ்தானம்)
மாயா (ஹரித்வார்)
காசி (வாரணாசி)
காஞ்சி
அவந்திகா (உஜ்ஜயினி)
துவாரகை

4. பூஜையின் சிறந்த தலங்கள்...

காலை பூஜை - இராமேஸ்வரம்
மத்யான பூஜை - திருவானைக்காவல்
சாயங்காலப் பூஜை - திருவாரூர்
இராக்காலப் பூஜை - மதுரை
அர்த்தஜாம பூஜை - சிதம்பரம்

5. நவக்கிரகங்களுக்குக்குரிய தூப தீபம்...

சூரியன் - சந்தனம்
சந்திரன் - சாம்பிராணி
செவ்வாய் - குங்கிலியம்
புதன் - கற்பூரம்
குரு - ஆலபம்
சுக்கிரன் - லவங்கம்
சனி - கருங்காலி
ராகு - கடுகு
கேது - செம்மரம்

6. "கேசவ" என்ற பதத்தின் பொருள்...

க, அ, ஈச, வ என்ற நாலு எழுத்துக்களின் சேர்க்கையே கேசவ என்ற பதமாகும். 'க'  என்றால் பிரம்மா, 'அ' என்றால் விஷ்ணுவையையும், 'ஈச' என்பது சிவனையையும் குறிக்கும். 'வ' என்பது தன் வசத்தில் வைத்துக் கொண்டிருப்பதைக் குறிக்கும்.  பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் உள்ளடங்கிய மேலான பரம்பொருளையே "கேசவ" என்ற சொல் குறிக்கிறது. 

7. இராசிகளும் அவற்றிற்குரிய இராகங்களும்...

மேஷம் - சண்முகப்ரியா
ரிஷபம் - ஸ்ரீராகம்
மிதுனம் - மாளவம்
கடகம் - ஹிந்தோளம்
சிம்மம் - வசந்தா
கன்னி - பூபாளம்
துலாம் - நாதநாமக்ரியா
விருச்சிகம் - கரகரப்ரியா
தனுசு - சாரங்கா
மகரம் - பைரவி
கும்பம் - சங்கராபரணம்
மீனம் - பங்காளா

8. முதல் முதலில் "ஸ்ரீராம ஜயம்" எழுதியவர் ஆஞ்சநேயர். ராம-ராவண யுத்தம் முடிந்த பிறகு, ராமனின் வெற்றிச் செய்தியை அசோகவனத்தில் சீதாபிராட்டியிடம் சொல்ல வந்த ஆஞ்சநேயரால் சந்தோஷ மிகுதியால் பேச முடியவில்லை. "என்ன செய்தி ஆஞ்சநேயா?" என்று சீதை கேட்டதற்கு, "ஸ்ரீராம ஜயம்" என்று மணலில் எழுதிக்காட்டினாராம் ஆஞ்சநேயர்.

9. சரஸ்வதியின் மறு பெயர்கள்...

கலைமகள், பாரதி, சாரதா தேவி, ஹம்ஸவாகினி, ஜகத், வாணீஸ்வரி, கவுமாரி, பிரம்மசாரிணி, புத்திதாத்ரீ, வரதாயினி, ஷீத்ரகண்டா, புவனேஸ்வரி.

10. பூஜைக்குரிய பூக்கள்...

உதயகால பூஜைக்கு:

நந்தியாவட்டை, சிரியாவர்த்தம், வெள்ளெருக்கு, வெண்தாமரை, புன்னை

நண்பகல் பூஜைக்கு:

செந்தாமரை, செங்கழுநீர், செவ்வலரி, செங்கடம்பு முதலிய சிவப்பு நிறப் பூக்கள்.

சாயாரட்சை(மாலை) மற்றும் அர்த்தஜாம பூஜை:

வெள்ளெருக்கு, வெள்ளலரி, பிச்சி, மந்தாரை, புன்னை, மல்லிகை, நந்தியாவட்டை, முல்லை

11. கிரக வழிபாட்டிற்காக நவகிரகங்களைப் பிரதட்சிணம் செய்யும் போது அந்தந்த கிரகத்துக்குரிய எண்ணிக்கையில் பிரதட்சிணம் செய்து வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது சுற்று வணங்கியபின் அந்தந்த கிரகத்துக்காக மேலும் விஷேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.

சூரியன் - 10 சுற்றுகள்
சுக்கிரன் - 6 சுற்றுகள்
சந்திரன் - 11 சுற்றுகள்
சனி - 8 சுற்றுகள்
செவ்வாய் - 9 சுற்றுகள்
ராகு - 4 சுற்றுகள் (அடிப்பிரதட்சிணம்)
புதன் - 5, 14, 23 சுற்றுகள்
கேது - 9 சுற்றுகள்
குரு - 3, 12, 21

12. முருக பக்தனான நல்லியக் கோடனின் நகரை எதிரிகள் வளைத்துக் கொண்டார்கள். அஞ்சிய அவன் முருகனை வழிபட்டான். அவன் கனவில் தோன்றிய முருகன் ஒரு குளத்தில் உள்ள தாமரை மலர்களைப் பறித்து எதிரிகளின் மீது எறியுமாறு பணிந்தருளினார். அவ்வாறே அவ்வரசன் தாமரை மலர்களைப் பறித்து எறிந்தான். அவை வேல்களாகச் சென்று பகைவரை ஓட்டின. வேல் எறிந்து வென்ற ஊர் "வேலூர்" என்ற பெயர் பெற்றது.

13. சிரார்த்தம் செய்வதற்கு பல இடங்கள் இலங்கையில் இருந்தாலும், குறிப்பிடத்தக்க இடம் "கண்ணியாய்". இது இராவணன் இறந்து போன தன் தாயாருக்கு நீர்க்கடன், தீக்கடன் செய்வதற்காகத் தனது வாளினால் ஏழு இடங்களில் நிலத்தை வெட்டினானாம். அப்படி வெட்டிய போது அந்த இடத்தில் இருந்து வெந்நீரூற்றுகள் தோன்றின. அந்த வெந்நீரூற்றுகள் உள்ள இடம் தான் கண்ணியாய் ஆகும்.

14. தென்னைக் குருத்தில் இழைக்கப்படும் தோரணத்தை ஒற்றைப்பட இழைத்துத் தொங்க விடுதல் வேண்டும். சுபகாரியங்களுக்குத் தோரணம் இழைக்கும் பொழுது பூமியைப் பார்த்தபடி இழைத்து இருக்க வேண்டும். அபரக்கிரியைகளுக்கு மேல்நோக்கி இழைத்தல் வேண்டும்.

15. நைவேத்தியங்களால் கிடைக்கும் பலன்கள்...

சர்க்கரைப் பொங்கல் - செல்வம் பெருகும்
பாயசம் - தான்ய விருத்தி
பருப்புப் பொங்கல் - காரியசித்தி
புளியோதரை - வியாதி நிவர்த்தி
தேங்காய் சாதம் - லஷ்மீகரம்
எலுமிச்சை சாதம் - ரோக நிவர்த்தி
மிளகு சம்பா - வியாதி நிவர்த்தி
கற்கண்டு சாதம் - மங்களம் உண்டாகும்
வடை மாலை - ஆரோக்கியம், சரீர பலம்
தயிர் அன்னம் - காரிய சித்தி, லாபம்
பாலன்னம் - ராஜயோகம்.

Post a Comment

Previous Post Next Post