ஆவணி 4 வியாழக்கிழமை: கல்கி ஜெயந்தி, செவ்வாய் ஜெயந்தி சந்திர தரிசனம்
ஆவணி 6 சனிக்கிழமை: விநாயகர் சதுர்த்தி. முழு முதற்கடவுள் கணபதியை பூஜை செய்து வழிபட நன்மைகள் நடைபெறும். முழு முதற்கடவுளான விநாயகரை வழிபடலாம். இன்று வாஸ்து நாள் வீடு கட்ட வாஸ்து பூஜை செய்ய நல்ல நாள்.
ஆவணி 7 ஞாயிறு கிழமை : ரிஷி பஞ்சமி : சப்த ரிஷிகளை வணங்கலாம். விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதியை ரிஷி பஞ்சமி என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபாடு செய்பவர்களின் இல்லங்களில் வளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த விரதத்தின் மூலம் வேண்டிய வரங்களைப் பெற முடியும். பெண்களின் சவுபாக்கியம் அதிகரிக்க வேண்டிச் செய்யப்படும் விரதம் இதுவாகும்.
ஆவணி 12 ஆவணி மூலம்: ஆவணி மூலம் நட்சத்திர நாள், சீதோஷ்ணத்தை நிர்ணயிக்கும் முக்கியமான நாள். அன்று காலையில் சூரியன் உதயமாகும் போதே ஆக்ரோஷமாக வெப்பத்தைச் சிந்தினால், அந்த ஆண்டு முழுவதுமே வெயில் கடுமையாக இருக்கும். மேகமூட்டத்துடன் வெப்பம் குறைவாக இருந்தால், சிறப்பான சீதோஷ்ணம் காணப்படும். சூரியன் உள்ளிட்ட கிரகங்கள் என்ன தான் தங்கள் பணியைச் செய்தாலும், இறைவனுக்கு அவை பணியாளர்கள் தான். அவையனைத்தும் இறைவனால் படைக்கப்பட் டவை. கிரகங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, இறைவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து.நல்ல சீதோஷ்ணம் வேண்டுமென வேண்டிக் கொள்கிறோம். மதுரையில் இந்த நாளில் இருந்து சொக்கநாதர் ஆட்சி தொடங்குகிறது.
ஆவணி 13 சனிக்கிழமை: வாமன ஏகாதசி, குரு ஜெயந்தி, புவனேஸ்வரி ஜெயந்தி
ஆவணி 15 திங்கட்கிழமை : திருவோணம். வாமன ஜெயந்தி. மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த நாள். மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு மூவுலகையும் தன் பாதங்களால் அளந்து பாதாள லோகத்திற்கு அதிபதியாக மாற்றிய தினம் திருவோணப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இன்று பௌர்ணமி பூஜை.
ஆவணி 16 செவ்வாய்கிழமை: மஹாளய பட்சம் ஆரம்பம். முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து இந்த பூவுலகிற்கு வந்து நம்முடன் வசிக்கும் நாட்கள். அவர்களை மகிழ்வுடன் கவனிக்க வேண்டும். பித்ரு தோஷங்கள் நீங்கும்.
ஆவணி 22 திங்கட்கிழமை : மஹா பரணி.
ஆவணி 22 திங்கட்கிழமை : மத்யாஷ்டமி ஸ்ரீ ஜெயந்தி
ஆவணி 27 சனிக்கிழமை : ஸ்ரீ சுக்கிர ஜெயந்தி. நவகிரகங்களில் சுக்கிரபகவானை வணங்க நன்மைகள் நடக்கும். இன்று வியாதிபாதி சிரர்த்தம் மகா வியாதிபாதம். முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஏற்ற நாள்.
ஆவணி 28 ஞாயிறு கிழமை: அஜ ஏகாதசி
ஆவணி 29 திங்கட்கிழமை : கல்கி துவாதசி
ஆவணி 30 செவ்வாய்கிழமை : மகா திரயோதசி ருண விமோசன பிரதோஷம்
Post a Comment