மைத்ரேய உபநிஷத்

part-1

இந்த உபநிடதங்களை விளக்குவதற்கு எனக்கு தகுதிகள் இருக்கின்றவா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லிவிடலாம்
ஏனென்றால் அடிப்படையில் எனக்கு சமஸ்கிருத ஞானம் கிடையாது.
பல வருடங்கள் தொடர்ந்து பகவத்கீதையையும்,உபநிடதங்களையும்,தத்துவங்களையும் படித்துவருதாலும்,ஓரளவு ஆன்மீக ஞானம் இருப்பதாலும் இவைகளை புரிந்துகொள்ள முடிகிறது
பத்தாவது வகுப்பு படிக்கும் மாணவனால் அவனுக்கு கீழ் படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும்.அவனுக்கு மேல் இருப்பவர்களுக்கு அவனால் பயன் இல்லை.
அடித்தட்டு நிலையில் பலகோடி மக்கள் இருக்கிறார்கள்.அவர்களுடன்ஒப்பிடும்போது நான் ஓரளவு படித்தவன் என்று சொல்லலாம்.
என்னைவிட அதிகம்  சமஸ்கிருத ஞானமும்,வேதாந்த ஞானமும் உள்ளவர்கள் பலர் இருக்கலாம்.
அவர்களின் பார்வையில் நான் பாலகன்
எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட நமக்குத் தெரிந்ததையாவது தெரியாதவர்களுக்கு சொல்லலாம் என்பதே எனது நோக்கம்

சுவாமி வித்யானந்தர்-குருஜி

முன்னுரை
-
உபநிடதம் என்றால் என்ன?

உபநிடதம் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு வேதம் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும்.
வேதம் என்ற வடமொழி சொல்லிற்கு அறிவு என்று பொருள்.
அறிவு என்பது நேருக்கு நேராக அறிவது.உண்மையை நேராக உணர்வது
முற்காலத்தில் ரிஷிகள் இறைவனை நேருக்குநேராக கண்டார்கள்.
இறைவனுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை கண்டார்கள்.
இந்த உலகத்திற்கும் இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பைப்பற்றிய அறிவை பெற்றார்கள்.
அந்த அறிவை தங்கள் சீடர்களுக்கு கூறினார்கள்.
இந்த அறிவு என்பது எப்போதும் இருக்கக்கூடியது.
ரிஷிகள் அதை உருவாக்கவில்லை. 
ஏற்கனவே இருப்பதை தங்கள் சீடர்களுக்கு கூறினார்கள்.
சீடர்கள் அதை குறித்துவைத்துக்கொண்டார்கள்.

இவ்வாறு பல்வேறு ரிஷிகளால் கூறப்பட்ட உண்மைகள் வேதங்கள் என்று பெயர்.
இதை பழைய காலத்தில் நான்காக தொகுத்தார்கள்..
அவை ரிக்,யஜுர்,சாம,அதர்வண வேதம். 
இந்த நான்கும் ஒரே கால கட்டத்தில் தொகுக்கப்பட்டவை அல்ல. 
ரிக் வேத காலம் என்பது சுமார் 10,000 முதல் 20,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதன் பின்னர் தொகுக்கப்பட்டது யஜுர்வேதம், அதன் பின்னர் தொகுக்கப்பட்டது சாமவேதம்.

வேதத்தை முழுவதுமாக யாராலும் தெரிந்துகொள்ள முடியாது.அதன் ஒருபகுதி வெளிப்பட்டுள்ளது பல பகுதிகள் இன்னும்வெளிப்படவில்லை
வேதத்தின் உதவியால்தான் இறைவன் உலகத்தை படைத்தார்.இந்த உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே வேதம் இருக்கிறது.வேதம் என்பது புத்தகம் அல்ல.
-
இந்த வேதம் இரண்டு பகுதிகளைக்கொண்டது ஒன்று பரஞானம்,இரண்டாவது அபரஞானம். 
பரஞானம் என்றால் இறைவனைப்பற்றியும்,அவரை அடைவதற்குரிய வழிகளைப்பற்றியும் கூறுவது. 
அபரஞானம் என்பது உலகியல் வாழ்க்கைக்கு தேவயானவற்றை கற்றுக்கொடுப்பது
இறைவனை உணரவேண்டும் என்ற எண்ணம் உள்ள சீடர்களுக்கு குரு பரஞானத்தை உபதேசிப்பார்.இதற்கு உபநிடதம் என்று பெயர்.உப-நிடதம் என்றால் குருவின் அருகில் இருத்தல் எனறு பொருள்.
இறைஞானத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால் குருவின் அறிவுரைகள் அவசியம்.

ஏன்? புத்தகங்களைப் படித்தால் ஞானம் வராதா?
குரு தனது சீடர்களுக்கு,தான் சேமித்துவைத்துள்ள தவ-சக்தியை கொடுக்கிறார்.
அதன் மூலம் சீடர்களின் பாவங்கள் குறைகிறது.
உயர்ந்த உண்மைகளை புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம்  ஏற்படுகிறது.
குரு எந்த அளவுக்கு தவத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ,அந்த அளவுக்கு விரைவாக சீடனின் அஞ்ஞானம் நீங்குகிறது
சில நேரங்களில் குரு எதுவும் பேசாமலே தனது சக்தியை கொடுக்க முடியும். சீடன் எதவும் கேட்காமலே ஞானம் பெற முடியும்.
புத்தகத்தை படிப்பதால் உயர்ந்த உண்மைகளை அனுபவத்தில் புரிந்துகொள்ள முடியாததற்கு காரணம் இதுதான்
...
தொடரும்..

Post a Comment

Previous Post Next Post