இறைவனின் ஐந்தொழில்கள் 
( சமஸ்கிருதத்தில் பஞ்ச கிருத்தியம்)

1 படைத்தல்: உயிர்கருவிலிருந்து  ஜீவராசிகளைப்படைத்தும், மாயையிலிருந்து(சூனியம்) தனு, கரணம், புவனம், போகம் இவற்றை தோற்றுவித்து உயிர்களுக்கு கொடுத்தல்

2 காத்தல் : தோற்றுவித்ததை உயிர்கள் அனுபவிக்குமாறு செய்ய ஒரு கால எல்லைவரை காத்து நிறுத்தல். 

3 அழித்தல்;  இதற்கு ஒடுக்குதல் என்றும்  கூறுவர்.வாழ்வில் உயிர்களுக்கு ஏற்படும் களைப்பு நீங்கும் பொருட்டு படைத்தவைகளை மீளவும் மாயையில் ஒடுக்குதல்.

4 மறைத்தல்:  பற்றுக்கொண்ட உயிர்கள் பக்குவம் பெறுவதற்காக தன்னை மறைத்து உலகத்தை காட்டல்.

5 அருளல்.: பக்குவம் பெற்று தன்னை நோக்கும் உயிர்களுக்கு தன்னைக்காட்டி தன் திருவடியில் சேர்த்தல்.
மூவகை ஐந்தொழில்

1 தூல ஐந்தொழில்; அண்டகோடிகளை படைத்தல் முதலியன

2 சூக்கும ஐந்தொழில்; முற்றழிப்பு (சர்வசங்காரம்) செய்த பின் மீளவும் உலகை தோற்றுவிக்க ஆவன செய்தல்

3 அதி சூக்கும ஐந்தொழில்: உயிர்களின் அறிவுக்கு அறிவாய் இருந்து தோற்றிவிப்பதும், ஒடுக்குவதும் செய்தல். 
இரு நிலைகளில் அருட்தொழில்கள்

1 சம்புபட்சம்;  இறைவன் தானே எழுந்தருளிவந்து அருள் புரிந்து உடனே மறைந்து விடுகிறான். இது மின்னல் தோன்றி மறைவது போல் ஆகும். இது சம்பு பட்சம் ஆகும்.

2 அனுபட்சம்: கருவழிப்பட்டு வாழும் மிக சிறந்த ஆத்மாக்களை இடமாகக் கொண்டு அருள் புரிவது    அனுபட்சம் ஆகும்

அத்துவிதம் ; இறைவன் தனது பெரு நிறைவில் உயிர்களை அடங்கக் கொண்டுள்ளான். தன்னுள் அடங்கி நிற்கும் உயிர்களோடு அவன் உடன் கலந்து பிரிப்பின்றி நிற்கிறான். அப்படி கலந்து நிற்கும் பிரிப்பறியாத நிலை அத்விதம் ஆகும். 

அதாவது  துவிதம் இரண்டு , அத்விதம் இரண்டல்லாத ஒன்று. இறைவனும்( பரமாத்மா), உயிரும் ( ஆத்மா) ஆகிய இருபொருள் இரண்டு என்னும் தன்மை தோன்றாமல் ஒன்று என்று சொல்லும்படி கலந்து நிற்கும் நிலை.

அத்துவித கலப்பு மூன்று அவை ஒன்றாதல், வேறாதல், உடனாதல் என்பன. இதை Gods particles  என்றும் கூறுவர். மிஷின்கள் செயல்பட கரண்டு உதவுவது போல் உயிர் செயல்பட இறை சக்தி தேவைப்படுகிறது. ஆனால் இறை சக்தி உடந்தையாக செயல்படாது  

1 ஒன்றாதல்:  உடலும் உயிரும் வேறு என்று கூற முடியாதபடி கலந்து இருப்பதைப்போல் , இறைவன் உயிரோடும்  உலகோடும் கலந்து  
 ஒன்றாய்  இருக்கிறான். இதனால் உயிரின்  இச்சை தூண்டப்படுகிறது. 

2 வேறாதல்: கண் உலகப் பொருட்களை பார்ப்பதற்கு சூரிய ஔி வேறாய் நின்று உதவுவதுபோல்  உயிர்கள் அறிவு விளக்கம் பெற வேறாய் நின்று உதவுகிறான்.

3 உடனாய்: உடல் இயங்குவதற்கு ஒவ்வொரு உறுப்புடனும்  உயிர் உடனியைந்து நிற்றல் பேல , உயிர் செயலாற்ற இறைவன்உயிருடன் உடனாக கலந்து நிற்கிறான்.  
இன்றியமையாமை
எப்பொருளும் நிலைபெற அதனோடு இறைவன் ஒன்றாயும்
உயிர்களின் அறிவை விளக்குவதற்கு சடமாகிய பொருளை இயக்க இறைவன் வேறாயும்
உயிர்கள் பொருட்களை அறிந்து அனுபவிக்க  இறைவன் உடனாயும் நிற்பதும் இன்றியமையாததாகிறது.
இறைவனின் திருகூத்து  
  உயிர்கள் அறிவித்தால் அன்றி அறியாது. தத்துவங்களை விளக்கினால் மட்டும் போதாது.  தத்துவங்களின் இயல்புகளை விளக்க வேண்டியதுள்ளது.   அப்போதுதான் உயிர்விளக்கமுறத் தொடங்கும். இதற்காகவே  இறைவன் ஐந்தொழிலை ஆற்றுகிறான்.அத்தொழில்கள் ஆற்றும் நிலை திருக்கூத்து.

1 ஊனநடனம்:  உயிர்கள் பிறவியில் உட்பட்டு உழலும் காலத்தில்  அவைகளின் விருப்பத்திற்கு இணங்க இறைவன் நடத்துகின்ற ஐந்தொழிலே ஊன நடனமாகும். இதன் விளைவாக உயிர்கள் சிற்றின்பத்தை துய்க்கின்றன. குறைந்த கால அளவிலே இவ்வின்பம் உயிர்கள் பெற  இறைவன் இயற்றும்  இக்கூத்து குறைக்கூத்து என்றும் அழைப்பர்.

 2 ஞான நடனம்:  ஊன நடனத்தால் ஆன்மாக்கள் உலக இன்பம் நுகரநுகர.உயிர்கள் இவ்வுலக இன்பம்  நிலையற்றது என்ற உண்மையை உணர்ந்து நிலைபேறுடைய சிவனை விரும்பி ஏற்கும்போது  அம்மான்மாக்களின் மலங்களை நீக்க  ஆற்றும் ஐந்தொழிலே ஞான நடனமாகும்.

3 ஆனந்த நடனம்:  ஞான நடனத்தால்  நிலைபேறு இன்பம்  பெற்ற சிவஞானியர்கள் பேரின்பத்தை துயிப்பார்கள்.  அத்துய்த்தல் தொடரும்பொருட்டு  அவர்களின் அறிவு, இச்சை, செயல்கள்  இறைவனையே பொருளாக பற்றி அழுந்தி இன்புற ஆற்றும் ஐந்தொழிலே ஆனந்த நடனமாகும்.

இறைவனின் திருக்கூத்து ஒன்றுதான். மிகுந்த உலகியல் இன்பத்தை விரும்பும் மக்களுக்கு குறை கூத்தாகிய ஊனநடனமாகவும். திருவருள் மீது பற்று மிகுந்து நிற்கும் அடியார்களுக்கு ஞானநடனமாயும், இறைவனின் திருவடிப்பேற்றை விரும்பி முக்தியை நாடும் சிவ ஞானிகளுக்கு ஆனந்த நடனமாயும் இருக்கும்.
சைவசித்தாந்தம் ஆன்மீக விஞ்ஞானம். சைவத்திற்கு மேலான சமயமும் இல்லை சிவனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை .
சைவசித்தாந்த நெறிகளை உலகறியச்செய்ய திருவாவடுதுறை ஆதீனம் சைவசித்தாந்தம், திருமுறைவிளக்கம், திருமுறைப்பாட்டு போன்ற வகுப்புகளை நடத்துகிறது. திருவாவடுதுறை ஆதீனம், நாகைமாவட்டம் 609803. போன். 04364232021. தொடரும்

செல்வசிவம் சைவசித்தாந்தம்.

Post a Comment

Previous Post Next Post