சப்தம் - ஸ்பரிசம் - ரூபம் - ரசம்- கந்தம் என்பவை ஐந்து சுகங்கள் எனப்படும். ஆனால் உண்மையில் இவைகள் தான் பல சமயங்களில் துக்கங்களுக்கும் காரணமாகிறது என்பது சத்தியமே. அதற்குக் கீழ்க்கண்ட உதாரணங்கள்

சப்தம் ஒன்றை மட்டுமே சுகத்திற்கு சாதனம் என்று பிரமித்து, மான் உயிரை விடுகிறது. (காட்டில் வேடர்கள் வாத்தியங்களை வாசித்து அந்தக் கானத்தில் காதைக் கொடுத்து மான்கள் மெய் மறந்திருக்கும் போது தான் அவற்றைக் கொல்லுகின்றனர் ).

பெண் யானையின் ஸ்பரிச சுகத்திற்கு ஆசைப்பட்டு காட்டில் ஆண் யானை அதன் கூடவே சென்று மனிதர்களின் கைகளில் அகப்பட்டு திண்டாடுகிறது.

தீப ஜ்யுவாலை ரூபத்தில் ஆசைகொண்டு விட்டிற் பூச்சி அதில் விழுந்து அதன் உயிரையே மாய்த்துக் கொள்கிறது.

உணவுக்காக மீன்கள் தூண்டிலில் அகப்பட்டு இறக்கின்றன.

வாசனைக்கு ஆசைப்பட்டு வண்டு மலரில் இருக்கும் போது, மலர் மூடிக் கொண்டதும் வெளியே வர முடியாமல் தவிக்கிறது.

இவ்விதம் ஐந்தில் ஒவ்வொன்றை மட்டும் இன்பத்திற்கு சாதனம் என எண்ணிச் செல்லும் பிராணிகள் எதுவுமே அங்கு இன்பத்தை அடையவில்லை ; என்பது மட்டுமல்ல. மிகுந்த துன்பத்தையும் அடைகின்றன, இப்படி இருக்கும் போது, இந்த ஐந்தையுமே சுகத்திற்க்குச் சாதனங்கள் என எண்ணிச் செல்லும் மனிதன் எந்த கதியை அடையக் கூடும் என்பதை ஆழ்ந்து சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியம். ஆகவே, மேற்கண்ட சுகங்களில் இருந்து விடுபட நாம் இறைவனை வேண்டுவோம். நன்றி  தமிழ் காலண்டர்

Post a Comment

Previous Post Next Post