மணி மகுடம் ஒன்று நீங்களாக அரசற்குரிய ஏனைய சின்னங்களையெல்லாம் உடையவராகத் திகழ்ந்தார். மணி மகுடம் பழங்காலத்தில் சோழ மன்னர்களுக்கு உரிய சிறப்பு. இது தில்லையம்பலத்தில் தில்லைவாழ் அந்தணர்களின் பாதுகாப்பில் இருந்தது. இதனை உரிய காலத்தி ல் சோழ மன்னர்களுக்கு மட்டுமே புனையும் நியதியை மேற்கொண்டிருந்தனர்.
நாயனார் தில்லையம்பதி சென்று தில்லைவாழ் அந்தணர்களைப் பணிந்து தமக்கு மணி மகுடம் சூட்டுமாறு வேண்டினார். அதற்கு அவர்கள், " ஐயா! நாங்கள் சோழர்களது பரம்பரையில் வரும் மன்னர்களுக்கேயன்றி மற்றவர்களுக்கு முடி சூட்ட மாட்டோம்" என்று அவர்கள் மறுத்து விட்டனர்.
நீதியும் நெறியும் நிறைந்த கூற்றுவ நாயனார், அவர்களை நெருக்கியும், இடர்படுத்தியும், பலாத்காரமாக அம்மணிமகுடத்தை பெற இயலவில்லை.
அன்றிரவு துயிலும்போது, " அம்பலவாணா! அருட்கடலே! எளியேனுக்கு முடியாக உமது திருவடியையே சூட்ட வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். இறைவன் அவரது கனவில் தோன்றி அவருடைய சென்னியின் மீது தமது திருவடியைச் சூட்டி அருள்புரிந்தார். கண்விழித்த நாயனார் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. சிந்தை மகிழ்ந்தார். இறைவனுக்கு திருத்தொண்டுகள் புரிந்து, உலகை கருணையுடன் அரசு புரிந்து முடிவில் அரனார் அடிமலர் சேர்ந்து இன்புற்றார்.
Post a Comment