கோவில்கள் பற்றிய வாஸ்து ரகசியம்

 
காசி, ராமேஸ்வரம் போன்ற கோவில்களுக்கு சென்று வந்தவுடன் சில பிரச்சனைகள் துவங்கிறது ஏன்? என்று ஒரு நண்பர் கேட்டார். சில குறிப்பிட்ட கோவில்கள் செல்ல முயற்சி எடுத்தாலும், சென்று வந்தாலும் சில துன்பங்கள் தொடங்கி மறையும் இதை பற்றி தெளிவு கொள்ளவே இந்த பதிவு சித்தர்களின் குரலில்......

முதலில் கோவில்கள் பற்றி சில அடிப்படை விடயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சைவ சமய வழிபாடு முறைகள் கொண்டது கோவில் என்றும், மனிதனின் வாழ்க்கையை நெறிபடுத்த கோவில் வழிபாட்டை அமைத்தார்கள் என்றும், மனிதன் தன்னை மிஞ்சிய சக்தி உள்ளது என்றும் அதை மனிதன் வழிபாடு செய்ய செய்த ஏற்பாடே கோவில்கள் என்றும் பலவாரியாக சொல்லலாம்.....

மறுபுறம் இது மனித வளம் மற்றும் பூமியை பாதுகாக்க செய்யப்பட்ட ஒரு அறிவியல் சார்ந்த அமைப்பு என்றும்,
தமிழனின் கட்டிட கலையை உலகறிய செய்யப்பட்ட முயற்சி என்றும் சொல்லலாம்.

சத் விவரமும் சனாதன தர்ம வாழ்க்கை பின்பற்றும் நபர்கள் கோவிலை
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பார்கள். அதாவது வனம் என்பது தலம் குறிப்பிட விருட்சம் கொண்ட மனைகளில் எழுந்த லிங்கம் பிறகு கட்டப்பட்ட கோவில்
அடுத்து ஊற்று நீர் இயற்கையாக உண்டான இடத்தில சுயம்புவாக தோன்றிய லிங்கம். பிறகு கட்டப்பட்ட கோவில். அடுத்து லிங்கத்தின் தன்மை (ஸ்படிகம், மரகதம் )போன்ற ரத்தினங்களால் அமைந்த லிங்கம் (மூர்த்தி) பிறகு கட்டபட்ட கோவில். இந்த தகவல்கள் பொதுவான விதி /நியதி என்று சொல்லலாம். இப்பொழுது கேள்விக்கு வருவோம் ....

சிலகோவில் ஏன் இப்படி சிலருக்கு துன்பத்தை தருகிறது....

என் வாழ்கையில் ஒரு அனுபவம், சதுரமலைக்கு ஒருமுறையாவது சென்றுவரலாம். அங்கே பல சத் விவரமும், சித்தர்கள் ஆசிபெற்ற ஆன்மாக்களும், மூலிகை வனமும் உள்ளது அங்கே உள்ள மகாலிங்க சுவாமி ஆடி மாதத்தில் பூமிக்கு குறிப்பாக சதுரகிரி மேருக்கு வருகிறார் அவரை தரிசனம் செய்ய நாம் சென்று வரலாம் என்று நண்பர் பால சந்தர் என்னை அழைத்த பொழுது நாங்கள் சென்ற பல துன்பங்களை கடந்து
தரிசனம் செய்து, அதன் பிறகு பல துன்பத்திற்கு ஆளாகி மனம் வருந்தி ஏன் சென்றோம் என்று குழம்பி வந்தேன்.

இதை போல கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு சென்று வந்த பொழுது வாழ்வில் மறக்க முடியாத அளவு துக்க நிகழ்வுகள் குடும்பத்தில் நடந்தது. ராமேஸ்வரம் செல்ல முயற்சிக்கும் பொழுது என் மகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் 9 வருடம் தொடர்ந்து தவிர்த்து கடந்த வருடம் (2019) தான் தரிசனம் செய்ய முடிந்தது.

கும்ப முனி அவர்களிடம் இதன் காரணம் என்ன என்று நான் சுவடிகளில் கேட்டபொழுது அவர் பதித்து இருந்த விபரங்கள் எனக்கு பிரமிப்பாக இருந்தது.

சித்தர்கள் தலம், தீர்த்தம், மூர்த்திகளை கோள்களின் அடிப்படையில் அமைத்து உள்ளார்கள். அவர்கள் கோவிலை மருத்துவமனையாக, கோள்களின் சாபத்தை நீக்கும் தன்மைகளாக, ஆன்மாக்களின் சாபத்தை கழிக்கும் தன்மைகளாகவும், மனிதர்களுக்கு முக்தி தரும் படியாகவும் அமைத்து உள்ளார்கள் என்று பல கோவில்கள் சென்று தரிசனம் செய்த பொழுது அறிந்து கொண்டேன். அவைகளை பற்றி சோதிட ரீதியாகவும் பக்தி ரீதியாகவும் பதிகிறேன்.

 நம் சமயத்தவர் கற்பாறைகளை கொண்டு கோவில் கட்டி வைத்த காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கற்களில் ஒலி ஒளி உள்ளது மேலும் பனி காற்று, மழை போன்ற காலங்களில் வெப்பமும், வெயில் காலம்களில் குளிர்ச்சியும் தரவல்லது
மலை பாறைகள். இதை உணர்ந்த நம் சான்றோர்கள் கோவிலை கற்களால் உண்டாக்கினார்கள். நம் வழியை பின்பற்றி ஜெயின் சமூகத்தினர் மலை குகையை தவத்திற்கு தேர்ந்து எடுத்தார்கள்.

சுவாமி சிலைகளை செய்ய 32 லட்சணத்துடன் கூடிய, தேரை இல்லாத பாறைகளை கண்டு அவைகளில் உருவங்களை செய்து உள்ளார்கள் என்று பல/பழைய வரலாறு சான்றுகளை நாம் படிக்கும் பொழுது அறிந்து கொள்ளலாம்.

தமிழன் கற்களை கொண்டு கட்டிய கோவில்

(1(கரக் கோவில்
(2)கொகுடிக்கோவில்
(3)மணிக்கோவில்
(4)ஆலக்கோவில்
(5)புங் கோவில்
(6)பெருங்கோவில்
(7)மாடக்கோவில்
(8)இளங்கோவில்
(9)ஞாழல்கோவில்

                என்று பிரித்து ரசிக்கலாம்.... 
இவைகள் பெரும்பாலும் தஞ்சை, திருவாரூர், நாகை, மாயவரம் போன்ற பகுதியில் காண முடியும் ...

பௌர்ணமி தினம் வரும் பொழுது எதாவது ஒரு சிவபெருமான் கோவிலுக்கு போவது என் வழக்கம் அப்படி சென்று வந்த உடன் அன்றைய பொழுது விடியலில் நான் சென்ற கோவிலின் அமைப்பு தன்மை அங்கே பதிவான ஆன்மாக்கள் மற்றும் கோவிலின் பழைய கட்டிட அமைப்புகள் எனக்கு காட்சிகளாக தெரிய வரும். ஒரு சில கோவில்கள் சென்று வந்தவுடன் மருத்துவமனை செல்வது அல்லது கடுமையான மன சஞ்சலம்/சண்டை அல்லது தொழில் போட்டியில் தோல்வி போன்றது ஏற்படும். இவைகளை நான் பெரிதாக நினைப்பது இல்லை. ஆனால் திருமணம் புரிந்து குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் மனம் வலிக்கிறது,

ஆணி மாதம் பௌர்ணமிக்கு நாக மலைக்கு செல்வோம் என்று முடிவு பண்ணி நண்பர்களுக்கு தகவல் சொன்ன பொழுது, என் மனைவி தொலைபேசியில் என்னை அழைத்து என் மகன் வீட்டு படிகட்டில் விழுந்து பற்கள் உள்ளே சென்று விட்டது என்றதும் உடலில் ஒரு நடுக்கம் மனம் வலிக்க துவங்கியது. பிறகு மருத்துவமனை செலவு மன உளைச்சல். முடிவாக நான் நாக மலைக்கு வரவில்லை மன்னிக்கவும் என்று நினைத்தவுடன் சூழ்நிலை மாறியது.

மனம் முதன் முதலாக கோவிலை பற்றி சிந்திக்க துவங்கியது. இது போல ராமேஸ்வரம் செல்ல முடிவு எடுத்து எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்ட பின் மகனுக்கு கடுமையான காய்ச்சல், அனைத்தும் ரத்து செய்து பின் உடல் நிலை சரியானது இவைகளுக்கு பின்
தான் நான் சில கோவிலுக்கு சென்ற பின்னும், செல்லும் முன்னும் சிந்தித்து
கவனிக்க ஆரம்பித்தேன். ஒரு முறை சதுரமலைக்கு ஆடி செல்ல பயணம் ஏற்பாடு செய்த பொழுது (கனவு)
விடியலில் ஒரு பெரியார் என்னிடம் வந்து நீ விரும்பிய பொழுது நான் உன்னை காண்கிறேன் நீ சதுர மேருவுக்கு வரவேண்டாம் என்று சொன்னபொழுது விழித்து கொண்டேன். குழப்பமாக இருந்தது
முதல் முறையாக ஆசான் கும்ப முனியிடம் சுவடிகளில் இப்படி கோவில்கள் செல்ல முயற்சி செய்தாலும், சென்று வந்தாலும், சில சங்கடங்கள் ஏற்படுவது எதனால் என்று கேள்வியை கேட்டபொழுது....

சுவடியில் மலை செவ்வாய் கிரகத்தின் ஆசிக்கு உட்பட்டது. அங்கே நீ செல்ல செவ்வாய் கோளின் ஆசிகளை பெற்று இருக்க வேண்டும். தற்பொழுது கரியனும் செவ்வாயும் சேர்ந்து இருப்பது உனக்கு நல்லது இல்லை. எல்லை தாண்டுவது என்பது உன்னுடைய ராசி நாதன் இப்போது உச்சமாகி உன் ராசியை அல்லது உன் லக்னத்தை பார்வை செய்யும் பொழுது நீ மலைக்கு சென்றால் தோஷம் இல்லை என்று பதித்து இருந்தார்.

ஒரு பெரிய ரகசியம் புரிந்தது மலைகள் செவ்வாயின் தன்மைகளை கொண்டது. மருத்துவம் பார்க்க சகல மூலிகைகளையும் தரும் இடம் மலைவனம். இப்படி மலையில் அமர்ந்து இருக்கும் முருகன், பெருமாள் போன்ற தெய்வமகள் செவ்வாயின் தன்மைகளை கொடுக்கிறது.

திருப்தி சென்று வந்த பலருக்கு திருமண பாக்கியமும், பழனி சென்ற பல
நோயாளிகளுக்கு மருந்தும் சரியாக கொடுக்கபட்டது என்று அனுபவத்தில் புரிந்தது....

இதைபோல சபரிமலை சென்று திரும்பும் முன் விபத்துகள் நடப்பது. பர்வத மலையில் தங்கிய பொழுது இயற்கையின் சீற்றத்தால் இறப்பது
போன்ற சம்பவங்களை நாம் செய்தி தாள்களில் காண்கிறோம் இவைகள் எல்லாம் செவ்வாயின் காரத்துவங்கள் தான்.....

யாத்திரையில் ஏன் கோவில்கள் நமக்கு பிரச்சனைகளை தருகிறது என்று தெரிந்து கொள்ளும் முன் சில தகவல்கள்....

கோவில் என்பது ஒரு தனித்துவம் வாய்ந்தது. குறிப்பாக சித்தர்கள் கொடுத்த கோவில்கள் மிகவும் அற்புதமானது. இன்று நாம் பல இடங்களில் புதிதாக எழும்பியுள்ள பல கோவில்களை காண்கிறோம். இவைகளினால் எந்த பாதிப்பும், பலனும் இல்லை என்று தான் சொல்வேன். பிரபஞ்ச ஞானத்தை உணர்தவன் ஞானி அது தன்னில் உள்ளது என்று உணர்தவன் பிரம்ம ஞானி என்று சொல்வார்கள். இந்த வகையில் உள்ள சித்தர்கள் கோள்களை சிவனின் பூத கணங்கள் என்று சொல்கிறார்கள். இந்த பூத கணங்கள் 9 வகை உண்டு. அவைகள் ஆன்மாக்களின் கர்மப்படி பிறவி கொடுத்து அந்த பிறப்பில் அவர்களுக்கு கர்மப்படி வாழ்க்கையை கொடுத்து கவனிக்கின்றன என்று சொல்லபடுகிறது. சித்தர்கள் இந்த பூத கணங்களின் தன்மையை உணர்ந்து அவர்களின் ஆசிகளை ஆண்மக்கள் பெறவும், எவ்வகையான இடத்தில் அவைகள் நன்றாக செயல்படும் என கவனித்து அந்த இடத்தில் கோவிலை எழுப்பி உள்ளார்கள்.

இப்படி அவர்களுக்கான கோவில்களை நாம் சென்று வழிபாடும் பொழுது
அந்த கோவிலில் உள்ள கோள்கள் (பூத கணங்கள்) நம்மை ஆட்கொள்ளும்.....

உதாரணமாக...

           சோதிடர்கள் எல்லோரும் நமக்கு பரிகாரம் என்று சொல்வது
நமக்கு ஆர்த்த அஷ்டம சனி. அஷ்டம சனி, 7.5 சனி, ஜென்ம குரு, அஷ்டம குரு போன்ற காலங்களில் தான் பரிகாரம் சொல்வார்கள்....

என்னுடைய கேள்வி இது.... ஏன் இவர்கள் இந்த காலம் இல்லாத பொழுது
நமக்கு பரிகாரம் செய்ய சொல்லுவது இல்லை?
ஆசான் அகத்தியர் சொல்கிறார். இந்த காலங்களில் தான் பரிகாரம் செய்ய வேண்டும். அப்பொழுது மட்டுமே பலிதம் ஆகும். காரணம் அந்த கோவில்கள் இதற்கு தகுந்தார் போல் அவர்களால் அமைக்கபட்டு உள்ளது. எல்லா காலங்களிலும் திருநள்ளாறு சிவன் கோவிலுக்கு செல்ல கூடாது, ராமேஸ்வரம் செல்ல கூடாது என்று என் அனுபவத்தில் புரிந்தது.

சோதிட ரீதியாக கவனிக்கும் பொழுது சிம்மம் முதல் - மகரம் (ஆண்) வரை உள்ள ராசிகள் சூரிய பிரிவு (நெருப்பு ) என்றும்,
கும்பம் முதல் - கடகம்(பெண் ) வரை உள்ள ராசிகள் சந்திர பிரிவு (குளுமை) என்றும் நூல்கள் சொல்கிறது.

ஆண் தன்மை உடைய ராசி நபர்கள் சிவன்/முருகன் கோவில், ஆண் தேவதை கோவில் போன்றவற்றால் மேன்மை அடைகிறார்கள்.

பெண்தன்மை உடைய ராசி நபர்கள் பெருமாள், அம்மன் கோவில் பெண் தேவதை கோவில் போன்றவற்றால் மேன்மை அடைகிறார்கள்...
           இந்த தகவல் என் அனுபவம்....

இது போல உங்கள் ஜாதகத்தில் 5 ஆம் இடம் 12 இடம் சுக்ரன், குரு இவர்களை
கவனித்து எந்த தெய்வத்தால், தேவதைகளினால் உங்களுக்கு மேன்மை கிடைக்கும் என்று அறிந்து கொள்ள முடியும் ...

கோவில்கள் போக கூடாது என்பது என்னுடைய இந்த பதிவின் நோக்கம் அல்ல. எந்த சூழ்நிலையில் எந்த கோவில் செல்வது நமக்கு மேன்மை தரும் என்பதும், மனித குலத்திற்கு நன்மை செய்ய கூடிய கோவில்கள் சித்தர்கள் நமக்கு தந்து உள்ளார்கள் என்பது புரிந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே சித்தர்களின் குரலில் இந்த பதிவின் நோக்கம்.....

உடல் நிலை சரி இல்லாதவர்கள் மருத்துவமனை செல்வார்கள், மருத்துவர் மருத்துவமனை செல்வார்கள், நலமாக இருப்பவர் மருத்துவமனை செல்வார்களா?

ராமேஸ்வரம், காசி, திருபுரந்துருத்தி, காளையார் கோவில், திருபஞ்சலி, திருக்கடையூர் போன்ற கோவில்களின் தன்மைகள் சாப நிவர்த்தி கோவில்கள். அனுபவித்து பார்த்தவர்கள் அறிவார்கள். திருமணம் புரிந்து தம்பதியர் ஆனவுடன் தான் சில சாபங்கள் எழுந்து நிற்கும். அவைகளை கண்டு நாம் பரிகாரம் செய்ய வேண்டும். இவைகளை பற்றி ஒரு பதிவை பிறகு தருகிறேன்.....

ரதத்தில் உலாவந்த பாண்டிய மன்னன் பசியால் வாடி மயங்கி பாதையில் விழுந்த ஒரு பெரியவரை கவனிக்காமல் அவர் மேல் ரதத்தை ஏற்றி கொலை செய்து விடுகிறான். காலம் செல்ல செல்ல அவனுக்கு வயிற்று உபாதை பெரிய நோயாக உண்டானது. பல மருத்துவம் செய்தும் பலன் இல்லை. பல சோதிடர்கள் பார்த்தும் அவனுக்கு பரிகாரம் சொல்லமுடியவில்லை. வனத்தில் இருக்கும் ஒரு முனியிடம் அவன் வேதனை பட்டு முறையிட
அவர் அரசன் செய்த பாபத்தை உணர்த்தி உனக்கு உண்டானது பிரம்மகத்தி தோஷம் இதை சரி செய்ய நீ சிவபெருமானுக்கு கோவில் எழுப்பி
வணங்க உன் உடல் நலம் பெரும் என்றதும் அரசன் பாண்டிய நாட்டில் இருந்து சோழ நாடு கும்பகோணம் வரை 200 கோவில்கள் கட்டி வழிபாடு செய்தான். அவன் கடைசியாக கட்டிய கோவில் மருதவனத்தில் லிங்கம் அமைத்து அதற்க்கு மகாலிங்க சுவாமி என்றும் இந்த கோவிலின் நவ கிரக கோவில். ப்ரநேஸ்வரர் கோவில் (சூரியன் கோவில்) என்றும், துர்க்கை கோவில் பட்டீஸ்வரம் என்றும், முருகன் கோவில் சுவாமி மலை என்றும்,
விநாயகர் கோவில் திருவலஞ்சுழி என்றும், குரு கோவில் அபத்த சகாயேஸ்வரர் என்றும், பைரவர் கோவில் சீர்காழி பிரம்மபுரிஸ்வரர் என்றும் எல்லை அமைத்து வழிபட்டான். (இந்த தகவல் திருவிடை மருதூர் கோவிலில் காணலாம்) இப்படி மருத வனத்தில் கோவில் கட்டி அரசன் வழிபட்டதும் அவனுடைய பிரம்மஹத்தி தோஷம் விலகியது என்று கோவில் ஏடுகள் சொல்கிறது.

பிரம்மகத்தி (ஆண்களை கொலை செய்த, ஆண் ஆன்மாவிடம் சாபம் பெற்ற நபர்கள் செல்ல நன்மை உண்டாகும்)
குரு நீசம், குரு சாபம், குரு வக்கிரம், குரு சுக்ரன் சேர்க்கை பெற்ற நபர்கள்
இந்த கோவிலுக்கு செல்வது நன்மை. எல்லோருக்கும் இங்கே செல்ல எண்ணம் ஏற்படாதவாறு கோள்கள் செயல்படும்.

நான் பிராமண பெரியவரிடம் பழகிய பொழுது அவர் என்னை அடிக்கடி திருவிடை மருதூர் கோவிலின் வேத பாடசாலைக்கு அழைத்து செல்வார். அப்பொழுது எனக்கு திருமணம் ஆகவில்லை. கோவிலில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பேன். திருமணம் முடிந்து எனக்கு அங்கே செல்ல மனம் வந்தது இல்லை.
குழந்தை பிறப்பு தாமதம் பற்றி ஆசான் அகத்தியரிடம் கேட்ட பொழுது குருவின் சாபம் பிரம்மகத்தி தோஷம் கொண்டு விட்டது மேலும், அம்பாளுக்கு வைத்த உணவு படையலில் நஞ்சை கலந்து விட்டாய் அது உண்டு பல பக்தர்கள் வயிற்று நோயால் அவதி உற்றார்கள் அதன் விளைவு சுக்ர சாபமாக மாறி குரு சுக்ரன் சேர்க்கை பெற்று பிறந்தாய்,
மருதவன பெருமானை வழிபட்டு ஆசி பெற்றால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்று பதித்து இருந்தார்.

ஒரு சிந்தனை.....

           பெருமாளை வழிபாடு செய்பவர்கள் பெருமாள் கோவிலுக்கு அடிக்கடி செல்பவர்களை நான் கவனித்து உள்ளேன். பெருமாளை தரிசித்து வந்தவுடன் /அல்லது செல்லும் முன் அவர்களுக்கு தொல்லைகள் /தடைகள் வந்து நீங்கள் கவனித்தது உண்டா? இருக்காது... நான் பார்த்தது இல்லை... பெருமாள் கொடுத்து ரசிக்கும் தன்மை உடையவர்.
(திருப்பதி - பெருமாள் கோவில் இல்லை கொற்கை கோவில் இதை இங்கே குழப்ப வேண்டாம் )

சிவன் கோவில்கள் குறிப்பாக சித்தர்கள் கொடுத்த கோவில்கள் தான் நம்மை சோதனை செய்யும். நான் சொன்னது தான் அவர்கள் தந்த கோவில்கள் கோள்கள் செயல்களை செயல்படுத்தும். சோதிடத்தில் உங்களுடைய லக்கினத்தில் இருந்து 6ம் இடம் தான் உங்கள் நோய்களுக்கான இடம். இதை தீர்வு காண 5 இடம் அதாவது பூர்வ புண்ணிய பலனை சொல்லும் இடம். இந்த இடத்தை, இதில் உள்ள கோள்களை கவனித்து அவைகளுக்கு நன்றி சொல்லி வழிபாடு செய்ய பழைய கணக்கு நேர் செய்யப்படும்.

ஒரு குடும்பத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வில்லை ஒரு தலை முறை சென்று விட்டது. அல்லது அகால மரணம் முறையான காரியம்
செய்யப்படவில்லை. இந்த குடும்பத்தை/குடும்ப நபர்களை சனியின் ஆசி இல்லாமல் ராமேஸ்வரம் அழைத்து செல்ல முடியாது. ஒரு வேலை ஒரு நபர் அவரின் புண்ணிய பலத்தால் சென்றாலும் அவருக்கு நன்மை இருக்காது. இதை அவர் தெரியாமல் சென்றாலும், தெரிந்து சென்றாலும் பலன் ஒன்று தான்... இதற்கு பரிகாரம் அவர் மீண்டும் அங்கே செல்ல நிவர்த்தி வழி /அல்லது மாற்றம் ஏற்படும்.

கோவில்களில் சனி காரதுவம் பெற்ற கோவில்கள் தான் மிகவும் சோதனை தருபவை இவைகள் ஆன்ம சாப நிவர்த்தி செய்பவை என்று அனுபவத்தில் உணர்ந்தது உண்டு.

குறிப்பு....

          சிவன் கோவிலுக்கு போக வேண்டாம் என்று நான் பதிய வில்லை, சிவன் கோவில் உங்கள் கர்மாக்களை அழிக்க துவங்கினால் கோள்கள் வழியாக தான் துவங்கும் என்று புரிந்து கொள்ளவும். எந்த சமயத்திலும் இல்லாத சிறப்பு நம் சமயத்தில் தான் உண்டு. இறைநிலை ப்ராத்தனை என்பது நம் ஆன்மாவுடன் இறைவனை தொடர்பு கொள்ள செய்யும் நிலை இதை எளிமையாக ஒரு ஒரு தனி மனிதரும் உணரும் படி அமைத்தது தான் நம் சமயம். முகமதியர்கள், கிறிஸ்துவர்கள், ஜெயின் சமயத்துவர் மற்றும் மற்ற சமத்துவர் கூட்டாக ஒரு இடத்தில அமர்ந்து வழிபடுவார்கள். நாம் மட்டும் தான் தனி தனியாக இறைவனை வழிபாடு எந்த காலத்திலும் செய்கிறோம்.

சித்தர்கள் நமக்கு தியானம், தவம் போன்ற செயல்களை இறைவழிபாட்டில் உணர்த்தி கொடுத்தும், இறைநிலையை அடையும் வழிகளையும் இதன் வழியாக நமக்கு உணர்த்தி கொடுத்தது நம் பாக்கியம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கிருபானந்த வாரியாரிடம் ஒரு அன்பர் கடவுள் எல்லா இடத்திலும் இருக்கும் பொழுது நாம் ஏன் கோவில் எழுப்பி வழிபடவேண்டும் என்றார். வாரியார் கூறியது பசுவின் உடலில் முழுவதும் பால் உள்ளது. அந்த பால் நமக்கு வேண்டும் என்றால் நாம் அதன் மடி வழியாக தான் பெறமுடியும். இது போல இறைசக்தி இந்த பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருக்கிறது நான் முருகன் என்ற தெய்வத்தின் வழியாக பக்தி முலம் பெறுகிறோம் என்றார்.

கோவில் என்று கட்டப்பட்டு இருக்கும் அனைத்து கோவில்களும் சிறப்பான கோவில் இல்லை. நண்பர் ஒருவர் என்னிடம் புதிதாக ஒரு பெருமாள் கோவில் கட்டி உள்ளார்கள்
வருகிறாயா தரிசித்து வருவோம் என்றார். நானும் அவருடன் சென்றேன்.
கோவில் உள்ளே சென்றதும் கால பைரவர் சந்நிதி, கண்டவுடன் பெருமாள் கோவிலில் பைரவரா?

தரிசனம் முடித்து துளசி நீர் அருந்திவிட்டு வாகனத்தில் ஏறி
அமர்ந்தவுடன் கடுமையான குமட்டல், வீடு வந்து சேரும் வரை வாந்தி நிற்கவில்லை. எந்த பெருமாள் கோவில் சென்றும் இப்படி எனக்கு ஏற்பட்டது இல்லை. இது போல காளி தேவி கோவிலுக்கு சென்று வந்த பொழுது உடலில் வெப்பம் ஏறி மருத்துவமனை செல்வது உண்டு. முருக பெருமான் கோவிலுக்கு (பழனி) சென்று வந்தவுடன் வயிறு உபாதைகள் அல்லது கடுமையான தலை வலி வருவது உண்டு. இப்படி சில கோவில் சென்று வந்தவுடன் உடலில் தொல்லைகள் ஏற்படுவது உண்டு .

இவைகளை பற்றி நான் கண்டு கொள்வது இல்லை. கவனிக்க ஆரம்பித்தவுடன் தான் கோவில் தன்மைகளை புரிந்து கொண்டேன். அகத்திய முனி இதை பற்றி எனக்கு சுவடிகளில் பதித்து இருந்தது....

எல்லா வேலைகளிலும் எல்லா கோவிலுக்கும் செல்லாதே, கோவிலின் பிரதிஷ்டை அமைப்பு உடலின் தன்மைக்கு ஏற்ப செயல்படும் என்று பதித்து இருந்தார். உண்மை இதன் பின் தான் சோதிடர்கள் சொல்லும் கோவில்கள், விரும்பி சென்ற கோவில்கள், எதிர்பாராத விதமாக சென்ற கோயில்கள், விரதம் இருந்து சென்ற கோவில்கள், மலை கோவில்கள், மலை மேல் அமர்ந்த கோவில்கள் என்று சென்று வந்த எல்லா கோவில்களையும் பற்றி ஆய்வு செய்ய ஆரம்பம் செய்தேன்...

ஆவினன் குடி பிரதிஷ்டை செய்யப்பட்டது ஞானம் தரும் விதம், (ஏவல், பில்லி போன்ற தீய செயல்கள் விடு படுவது) ராமேஸ்வரம் ஆன்ம சாந்தி, கோனேரி ராஜபுரம் என்னும் திருநல்லம் - சென்று வந்த எல்லா சிவபெருமான் கோவிலின் புண்ணிய பலனை தருவது, சிவபுரம் - மன நிலையை மாற்றுவது, திருத்தணி கடனால் வந்த வினையை அகற்றுவது,
திருகண்ணன்மங்கை பெண்களால் வந்த வினையை அகற்றுவது, கோடி ஹத்தி காமத்தினால் செய்த வினைக்கு வந்த தொழு நோய்யை விரட்டும் கோவில்......
இப்படி நான் தரிசனம் செய்த கோவில்களை பற்றி சொல்ல பதிவு போதாது.....

எந்த கோவில்களில் ஆன்ம பதிவுகள் உள்ளதோ அங்கே நம் கோள்கள் செயலற்று போகும்.... நம் ஆன்ம பதிவில் உள்ள கர்மங்கள் இவர்களால் கலைக்கபட்டு விலகும்.

உறையூர் பஞ்சவர்ண சாமீ உடனுறை காந்திமதியம்மன் கோவிலுக்கு நான் அடிக்கடி செல்வது உண்டு. அந்த அம்பாளுக்கும் அப்பனுக்கும் என் வீட்டில் இருந்து மலர் பறித்து மாலை தொடுத்து அவர்களுக்கு அணிவித்து ஆழகு பார்ப்பது எனக்கு தனி இன்பம். ஒரு சிவ ராத்திரி விடியலில் (கனவு) நான் கோவிலில் உள்ளே செல்கிறேன்
மடப்பள்ளியில் இருந்து காவி நிற அம்மை கையில் ஓல கூடையுடன் என்னிடம் வந்தவர். ஒரு நபரை அழைத்து அந்த பிரசாதத்தை இவனுக்கு கொடுங்கள் என்றதும் ஒல்லியாக ஒரு நபர் இடுப்பில் வேஷ்டி மட்டும் அணித்து இருந்தார். அவர் என்னிடம் ஒரு குவளையுடன் வந்தார். எதிர் திசையில் இருந்து (கருவறை அருகே) ஒரு கரிய நிறத்தவர் வந்தார். அவரை தொடர்ந்து இரு நபர்கள் இவர்கள் மூவரும் அழகான வெண்மை உடை அணித்து இருந்தார்கள். என்னிடம் வாங்கிகொள் என்றார்கள். என் கைகளில் அவர்கள் கொடுத்தது ஒரு பானகம் அதை பார்த்ததும் நான் அவர்களிடம் என் மனைவி தான் மாலை தொடுத்து தந்தார். அவருக்கும் வேண்டும் என்றதும் அவர்கள் அவளிடமும் தந்தார்கள்.(மன்னிக்கவும் இதை மேலும் பதிக்க கூடாது) இவர்கள் 5 நபர்களின் ஆன்மாக்கள் தான் 5 வர்ணமாக/ பஞ்சவர்ணமாக சாமீ மீது விழுவதால் பஞ்சவர்ண சாமீ என்று அழைக்கப்பட்டார் என்று எனக்கு புரிந்தது.

இது போல அவனின்குடி குழந்தை வேலப்பரை தரிசனம் செய்ய ஒரு நண்பருடன் சென்று வந்தேன். அவர் சிறந்த முருக பக்தர் சூழ்நிலை அவரை ஆவின்குடிக்கு அழைக்கவில்லை. நாங்கள் சென்று வந்த பிறகு மறுநாள் என் வீட்டிற்கு வந்து என் கைகளை
பிடித்து கண்ணீர் சிந்தி நண்பரே உங்களுக்கு நன்றி நான் விடியலில் குழந்தை வேலப்பரை தரிசனம் செய்தேன். பெரும் பாக்கியம் என் வாழ்கையில் கிடைத்தது நன்றி என்றார்.

நம் ஆன்மாவில் பதிவானது தான் கொடுக்கப்படும் இடம் தான் கோவில் என்று புரிந்து கொள்ளவேண்டும்.

சோதிட ரீதியாக....

நம்முடைய ஆயுள் சுழற்சியை 120 வருடங்கள் என்று பிரித்து அவைகளை 9 கிரக தேவர்களுக்கு பிரித்து கொடுத்து
அதன் வழியே திசை என்றும் நமக்கு சொல்லி அதில் கிரக தேவதைகளுக்கு
ஏற்ப கோவில்களுக்கு சென்றால் நமக்கு மேன்மை உண்டு என்று சோதிட நூல்கள் சொல்கிறது. 

சூரிய திசை நடக்கும் பொழுது ஞாயிறு அன்று கோவில்களுக்கு செல்லுதல்,
சந்திர திசை நடக்கும் பொழுது திங்கள் அன்று கோவில்களுக்கு செல்லுதல்,
செவ்வாய்திசை நடக்கும் பொழுது செவ்வாய் அன்று கோவில்களுக்கு செல்லுதல், புதன்திசை நடக்கும் பொழுது புதன் அன்று கோவில்களுக்கு செல்லுதல், குருதிசை நடக்கும் பொழுது வியாழன்யன்று செல்லுதல், சுக்ர திசை நடக்கும் பொழுது வெள்ளியன்று கோவில்களுக்கு செல்லுதல், சனி திசை நடக்கும் பொழுது சனியன்று கோவில்களுக்கு செல்லுதல், ராகு திசை நடக்கும் பொழுது சனியன்று கோவில்களுக்கு செல்லுதல், கேது திசை நடக்கும் பொழுது செவ்வாய் அன்று கோவில்களுக்கு செல்லுதல்... நன்மையை தரும் என்றும்,

சூரிய திசையில் சிவனையும் நிற்கும் பெருமாளையும், சந்திர திசையில் நீரில் உள்ள பெருமாளையும் பௌர்ணமியில் சிவனையும், செவ்வாய் திசையில் முருகனையும் பாம்புடன் உள்ள அம்பாளையும், புதன் திசையில் நடன பெருமாளையும் நடராஜரையும்,
குரு திசையில் சற்குரு மலைமேல் கோவில் அனைத்தையும், சுக்ர திசையில் அஷ்ட முர்த்த சிவனையும் சயன கோல பெருமாளையும், சனி திசையில் சமாதி உள்ள கோவில்களையும் ஆன்ம சாந்தி கோவில்களையும், ராகு திசையில் வன காளி சர்ப்ப கோவில்கள் நாகங்கள் வழிபாடு செய்த பெருமாள் கோவில் சிவன் கோவில்கள் வெட்ட வெளி கோவில்கள் வயலில் உள்ள கோவில்கள், கேது திசையில் தீ அம்சம் உள்ள கோவில்கள் சித்தர்கள் உலாவும் மலை கோவில்கள் குறிப்பாக குகை கோவில்கள் முருகன் கோவில்கள் நன்மை தரும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது.....

சரியாக பிரதிஷ்டை செய்யாத கோவில்கள், தேவதை வாழும் கோவில்கள், நாகம் வாழும் வன கோவில்கள், போன்ற கோவில்கள் எல்லோருக்கும் மேன்மை தராது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post