விளக்கு என்பது மகாலட்சுமியின் ஸ்வரூபமாக கருதப்படுகிறது. அதில் ஏற்றப்படும் தீபம் ஆனது எம்பெருமான் ஈசனை குறிக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்கள் மகாலட்சுமியாக இருப்பதால், அவர்களுடைய கைகளால் தீபம் ஏற்றும் பொழுது, மகாலட்சுமி மனம் மகிழ்கிறாள். அவர்களுக்கு செல்வ வளத்தை வாரி வழங்கவும் செய்கிறாள்.
 
ஜோதியை ஒளிர விட்டு ஈசனை துதிப்பதால் நம் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை துன்பங்களும் நீக்கப்படுகிறது. இதனை காலை, மாலை தினமும் செய்பவர்களுக்கு கட்டாயம் நடக்கும். இதை தான் நம் முன்னோர்கள் வழி வழியாகக் கடைபிடித்து வந்த ஒரு விஷயம். ஆனால் இப்பொழுது இதனை பலரும் பின்பற்றுவது கிடையாது அதனால் தான் குடும்பத்தில் சதா சண்டை, சச்சரவு என்று நிம்மதி இழந்து காணப்படுகிறோம்.

ஐயனையும், அம்மையையும் தினமும் விளக்கு ஏற்றி வைத்து ஒரு பெண் அழைத்தால் வீட்டில் எந்த ஒரு கஷ்டமும், துன்பமும் ஏற்படாது. பணப்பிரச்சனை என்பது இருக்கவே செய்யாது. இதனால் மனதில் நிம்மதியும், சந்தோஷமும் எப்போதும் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எந்த வீட்டில் இதனை செய்ய தவறுகிறார்களோ அந்த வீட்டில் எல்லாம் கோப தாபங்களும், சண்டை சச்சரவுகளும், அடிதடிகளும் கூட நடக்கும். மனதில் தேவையில்லாத சஞ்சலமும் ஆட்கொள்ளும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாயும். வருமான தடை, தொழில் விருத்தி இன்மை போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க வாய்ப்புள்ளது.

ஆண்கள் பொதுவாக வீட்டில் இருப்பதில்லை. வெளியில் ஆயிரம் பிரச்சினைகளை மனதில் சுமந்து கொண்டு, பல இடங்களில் சுற்றித் திரிந்து வீட்டிற்கு வருவார்கள். அவர்களிடம் தெளிவான சிந்தனையும், பக்தியில் நிலைக்கக் கூடிய மனமும் இருப்பதில்லை. இந்த சூழ்நிலையில் ஆண்கள் விளக்கு ஏற்றினால்! அதனால் எந்த ஒரு பலனும் கிடைக்காது. விளக்கு ஏற்றும் பொழுது முழு ஈடுபாட்டுடனும், பக்தி சிரத்தையுடனும், இறை சிந்தனையுடனும் ஏற்ற வேண்டும் அப்போது தான் அதற்குரிய முழு பலனை நீங்கள் அனுபவிக்க முடியும். இந்த காரணத்தினால் தான் ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றுவது கூடாது என்று சொல்லப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post